என்னோட 50 ஓட்டும் இவருக்கு தான்.! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதி ஓபன் டால்க்.!

0
5101
Abarnathi
- Advertisement -

கடந்த ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக தொடங்கிய நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் பங்குபெற்றனர். அதில் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் அகர்பத்தி என்று செல்ல பெயரை பெற்ற அபர்ணதி. 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is aparnathy-819x1024.jpg

20 வயதாகும் அபர்ணதி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சக போட்டியாளர்கள் அனைவரிடமும் வாயாடி என்று பெயர் பெற்றார். தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : அமலா பால் காதலளிப்பதாக சொன்ன நபர் இவரா.! வெளியான நெருக்கமான புகைப்படம்.! 

- Advertisement -

வசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதமாக நடந்து வருகிறது. ஆனால், நீண்ட நாட்களாக படத்தின் எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த படத்தில் அவர் லேடி தாதாவாக நடிக்கிறாராம். யாருக்கும் பயப்படாத, ஆண்களை புரட்டி எடுக்கும் தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அபர்ணதி.

aparnathi

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபர்ணதியிடம் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கேட்கப்பட்டது. அப்போது அபர்ணதியிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அதற்கும் பதிலளித்த அபர்ணதி, பிக் பாஸ் வீட்டில் எனக்கு மிகவும் பிடித்த நபர் தர்ஷன் தான், அவருடைய நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதிலும் தர்ஷன், வனிதாவை எதிர்த்து பேசிய போது அதனை கண்டு நான் வீட்டில் கை தட்டினேன். தர்ஷன் மட்டும் நாமினேஷன் லிஸ்டில் வந்தால் என்னுடைய 50 ஓட்டும் அவருக்கு தான் என்று கூறியுள்ளார்.

Advertisement