தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘மான்ஸ்டர்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரியா பவானி சங்கருக்கு சமூக வலைத்தளத்திலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். ஆனால், இவரது பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு இருப்பபதை கண்டு கடுப்பாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். அந்த போலி கணக்கை குறிப்பிட்டு ‘பதிவிடுவதில் என்னை விட நீங்கள் பொறுப்பாக இருக்கிறீர்கள். ஆனால், மணிக்கு ஒருமுறை பதிவிட்டு என்னை எரிச்சலாக்காதீர்கள் ‘என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்க : முன்னாள் காதலர்களுடன் ஐஸ்வர்யா ராய்.! மோசமான புகைப்படத்தை பதிவிட்ட விவேக் ஓபராய்.!
பிரியா பவானி சங்கரின் இந்த பதிவினை கண்ட ரசிகர்கள் ,இந்த போலி கணக்கு பிரச்சனையில் இருந்து தப்பிக்க உங்களுடைய ட்விட்டர் கணக்கை சரிபார்த்துக்கொள்ளுங்கள் (verified) என்று கமன்ட் செய்து வருகின்றனர். ,மேலும், ஒரு சில ரசிகர்களோ அது போலி கணக்கா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இதில் ஆச்சர்யபடும் விஷயம் என்னவென்றால் பிரியா பவானி சங்கரின் உண்மையான ட்விட்டர் கணக்கை அந்த போலி கணக்கை தான் அதிகம் பேர் பின்பற்றி வருகின்றனர். போலி கணக்கை 497 ஆயிரம் பேரும் பிரியா பவானி சங்கரின் கணக்கை 73 ஆயிரம் பேரும் பின் தொடர்கின்றனர்.