சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு ஏராளமான நடிகர் நடிகைகள் சென்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர் ஆவார். ஆரம்ப காலத்தில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்தார்.
இவர் நடித்த சீரியல் இவருக்கு மாபெரும் புகழை ஏற்படுத்தி தரவே பின்னர் இவருக்கு ‘மேயாத மான்’ படத்தின் மூலம் கதாநாயகியாக வாய்ப்பும் அமைந்தது. அதன் பின்னர் கார்த்திக்குடன் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார். தற்போது சூர்யாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த சில காலமாகவே ப்ரியா பவானி சங்கர் பதிவிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களின் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்திவிடுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கூட சற்று கவர்ச்சியான ஆடைகள் ப்ரியா பவானி சங்கர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஷாக்கை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சில குரங்குகள் அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தவாரும் இருப்பதை கண்ட ரசிகர்கள் ‘அந்த இடத்தில் நாங்கள் இருக்கக் கூடாதா’ என்று புலம்பி வருகின்றனர்.