முன்பெல்லாம் வெள்ளி திரையில் இருந்து தான் சின்னத்திரைக்கு இடம் பெயர்வார்கள். ஆனால், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். இப்படி போனவர்கள் தான் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் என்று பல பேர் சொல்லலாம். மேலும், இவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பல படங்களில் நடித்து பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். மேலும்,நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில் பிறந்தவர். இவர் இவர் முதன்முதலில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தான் பணியாற்றினார்.
பின் மீடியா மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவர் ஒரு குழந்தைக்கு தாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது இவர் சீரியலில் தனக்கு மகளாக நடித்த குழந்தை உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் சேர் செய்தும், லைக்குகளை அள்ளிக் குவித்துக் கொண்டும் வருகின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் இவருக்கு இதன் மூலமாக சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தது. மேலும், சினிமா துறைக்கு வருவதற்கு கவர்ச்சி அவசியமில்லை நடிப்பும், திறமையும் இருந்தால் போதும் என்பதை உணர்த்தியவர். இவர் சினிமா உலகில் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் தயாரித்து வெளிவந்த ‘மேயாதமான்’ படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இதுவே இவருடைய முதல் படமாகும். அதன் பின் 2018 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் மக்களிடையே பிரியா பவானி சங்கர் அவர்கள் பிரபலமானர். இதற்கு பிறகு இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் தொடர்ந்து வர தொடங்கியது.
பின் எஸ். ஜே. சூர்யா உடன் இணைந்து ‘மான்ஸ்டர்’ என்ற திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் விளைவாக தற்போது இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று உள்ளார் எந்த தகவலும் வந்துள்ளது. இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய்க் கொண்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் தற்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம்.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வரும் வாய்ப்புகள் பிரியா பவானி சங்கருக்கு உள்ளது என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், இதனை தொடர்ந்து நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் இந்தியன் 2 படம் மட்டும் இல்லாமல் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து மீண்டும் ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து களத்தில் சந்திப்போம், விக்ரம் 58வது படம், மாஃபியா அத்தியாயம்-1, கசடதபற, குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.