கடுமையான ஒர்க் அவுட் – படு ஸ்லிம்மாக மாறிய பிரியா பவானி சங்கர். அதுக்குன்னு இப்படியா ?

0
1621
priya
- Advertisement -

தொலைக்காட்சியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியாபவானி ஷங்கர் .பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் இறுதியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான ‘மான்ஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் தனது உடலை கட்டு கோப்பாக வைத்துக்கொள்ள கடினமாக உடற் பயிற்சயில் ஈடுபட்டுள்ளார் அம்மணி. சமீபத்தில் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் பிரியா பவானி சங்கரை பார்த்து ரசிகர்கள் வியந்து போய் இருக்கிறார்கள்.

அதே போல டெட் லிப்ட் எனப்படும் எடை தூக்கும் பயிற்சியில் 110 பவுண்ட் எடையை தூக்கி அசத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வெறித்தமான ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த லாக் டவுன் சமயத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முன்பை விட உடல் எடையை குறைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement