ஒருபோதும் அப்படி நான் நடிக்க மாட்டேன். அதற்கு காரணம் இதுதான். ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய பிரியா பவானி.

0
4778
priyabhavani

முன்பெல்லாம் வெள்ளி திரையில் இருந்து தான் சின்னத்திரைக்கு இடம் பெயர்வார்கள். ஆனால், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்பவர்கள் தான் அதிகம் உள்ளார்கள். இப்படி போனவர்கள் தான் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் என்று பல பேர் சொல்லலாம். மேலும், இவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று பல படங்களில் நடித்து பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

priyabhavani shanka

இவர் முதன்முதலில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தான் பணியாற்றினார்.பின் மீடியா மீது அதிக ஆர்வம் இருந்த காரணத்தினால் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடித்தார்.சீரியலில் கிடைத்த அமோக வரவேற்பால் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம் போன்று பல படங்களில் நடித்து உள்ளார்.இறுதியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘மாபியா’ படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானியிடம் கவர்ச்சி வேடங்களில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டப்பட்டது.

அதற்கு பதில் கூறிய பிரியா பவானி சங்கர் என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்” என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் அப்சட் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement