பிக் பாஸ் 2-வில் ஓவியா யார் தெரியுமா..! பிரியா பவானி ஷங்கர் அதிரடி பதில்.!

0
1811
oviya

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கப்பெற்ற ஓவியா தான் லைம் லைட்டாக இருந்து வந்தார். இவருக்கு என்று பல ரசிகர்களும் இன்னும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஓவியா போன்று யார் இருப்பார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை பிரியா பவாணி ஷங்கர்.

priya bhavani shankar

- Advertisement -

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சினிமாவில் நுழைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை ‘ என்ற சீரியலில் மூலம் பிரபலமடைந்து பின்னர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து கலக்கி வருபவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..

சமீபத்தில் இவர் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார் ஓவியாக இருப்பார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது ‘அதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர் ‘நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பார்ப்பதை விட மீம்ஸ் மூலம் தான் அதிகம் பார்த்து தெரிந்து கொண்டேன்’ என்று முதலில் கூறினார்.

-விளம்பரம்-

bigg boss

பின்னர் ‘ முதல் இரண்டு வாரத்திற்கு அனைவருமே ஓவியா போல தான் தெரிவார்கள். சில நாட்கள் கழித்து தான்,அவர்களின் உண்மையான சுயரூபம் தெரியும். ஒருவரை போல மற்றொருவர் இருக்க முடியாது. ஒருவேளை யாரேனும் ஓவியாவை போல இருக்க நினைத்தாலும் அது பார்த்தவுடனே தெரிந்து விடும் ‘ என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மும்தாஜ் தான் தன்னுடைய அபிமான போட்டியாளர் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement