கமல் ரஜினியை நம்ப முடியாது.! மோசமாக விமர்சித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்.! கடுப்பில் ரசிகர்கள்

0
247
Priya-Bhavani-Shankar

விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வைபவ் நடித்த “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். சமீபத்தில் கார்த்திக் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டபட்டு வருகிறது.

Priya_Bhavani_Shankar

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‘தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் மிக பெரிய நடிகர்களாக இருக்கலாம். ஆனால்,நிஜ வாழ்க்கை வேறு தான்.சினிமாவில் பேசும் வசங்கங்களை மக்கள் நம்பி விடுகின்றனர்..

அவர்கள் இருவரும் பெரிய நடிகர்கள் என்பதால் அவர்கள் அரசியலிலும் நம்ப வேண்டும் என்பது அவசியமில்லை. அரசியில் ஒன்றும் சினிமா போன்று இரண்டரை மணி நேர படமல்ல. அவர்கள் தேர்தலில் ஜெயித்து 5 வருடம் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பது தான் முக்கியம். ஒரு ரசிகையாக அவர்கள் படத்தை முதல் நான் பார்ப்பேன். ஆனால், ஒரு குடிமக்களாக நான் தெளிவான முடிவை எடுப்பேன். ” என்று பேசியுள்ளார்.

kamal and rajini

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களது அரசியில் பயணத்தை மும்மரபடுத்தி வருகின்றனர். இவர்களது இரு ரசிகர்களும் இவர்களின் அரசியலுக்கு ஆதரவாக இருந்து வரும் இந்த நிலையில் பிரியா பவானி ஷங்கர் கூறிய இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.