தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னனி நடிகையாக வளர்ந்து இருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக தான் தனது கெரியரை துவங்கியவர். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்தார். இவர் நடித்த முதல் சீரியலிலேயே தனெக்கென ரசிகர் படையை சேர்த்தார். தற்போது வெள்ளித்திரையில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். இவர் மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பின் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஃபியா படத்திலும் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கரின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதில் தற்போது இருப்பதை விட சற்று பருமனாக இருக்கிறார். சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர், நான் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒரு நியூஸ் புல்லடினுக்கு ரூ. 360 சம்பளம் கிடைத்தது என்று ப்ரியா தெரிவித்தார். அதே போல முதல் ஆறு மாதம் எந்த சம்பளமும் வாங்கவில்லை என்றும் கூறி இருந்தார்.
தற்போது இவர் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி “பொம்மை” படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வரப்போகிறது.மேலும், பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.