ஓவராக உடலை குறைத்ததால் கை மாறிய கீர்த்தி சுரேஷின் பாலிவுட் படம். வாய்ப்பை தட்டிய தமிழ் நடிகை.

0
44424
keerthi-suresh
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்ற பெயரில் தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தார்கள். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது.

-விளம்பரம்-
Image result for keerthi suresh and ajay devgan

- Advertisement -

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் திரைப் படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று பல கருத்துக்கள் சமூக வலைகளில் பரவியது. பொதுவாகவே நடிகைகளுக்கு பாலிவுட்டில் நடிப்பதை மிகப்பெரிய கனவாக வைத்திருப்பார்கள். அந்த கனவு குறுகிய காலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது. பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் “மெய்டன்” என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இவர் உடல் எடை குறைத்து இளமையாக தெரிவதால் இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் திடீரென விலகியுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழுவினர். கால்ஷீட் கொடுத்த நாட்களின் போது இருந்த உடல் எடையை விட படத்தில் ஒப்பந்தம் செய்யப்படும் போது இருந்த உடல் எடை மிக குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனால் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று முடிவு செய்திருப்பார் என்று கூறப்படுகிறது. அதோடு அஜய் தேவ்கனை விட கீர்த்தி சுரேஷ் மிகவும் இளமையாக தெரிவதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுகிறார்கள்.

-விளம்பரம்-
Image result for ajay devgan maiden

தற்போது இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த கதாபாத்திரத்தில் பருத்திவீரன் பட நடிகை பிரியாமணி அவர்கள் நடிக்கிறார். இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தை அமித் ரவீந்திரநாத் சர்மா அவர்கள் இயக்க உள்ளார்.மேலும், இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாகவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் நடிகை ப்ரியாமணி.

Image result for Priyamani webseries

இவர் அமேசான் பிரைம்மில் “பேமிலி மேன்” என்ற வெப் சீரிஸில் நடித்து வந்தார். இதற்கு பிறகு தான் அவருக்கு பாலிவுட்டில் அஜய்தேவ் கான் நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக உருவாகி வரும் படம் தலைவி. இந்த படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார். இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வருவதற்கு முக்கிய காரணம் இந்த “பேமிலி மேன்” வெப் சீரியல் தான் என்று கூறப்படுகிறது.

Advertisement