நமது பழைய பழக்கம் தான் இப்போது தேவைபடுகிறது. கொரோனா குறித்து பிரியங்கா சோப்ரா பதிவிட்ட வீடியோ.

0
620
priyankachopra
- Advertisement -

பாலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். ஆனால், அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இவர் அதிகம் ஹிந்தியில் தான் கவனம் செலுத்தி வந்தார். இவர் இந்தியில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் இந்தியில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கைகோர்த்து நடித்து உள்ளார். பாலிவுட்டில் கலக்கிய இவர் ஹாலிவுட்டிலும் பிரபலமாக திகழ்ந்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for priyanka chopra corona virus

- Advertisement -

ஹாலிவுட் சென்றதும் இந்தியா பக்கம் திரும்பாமல் அங்கேயே படங்களில் பிசியாக நடித்து வந்தார். பின் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட்டில் பிரபலமான பாடகரும், நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. நடிகை பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

தற்போது இவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சில மாதங்களாக உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கரோனா வைரஸ். உலகம் முழுவதும் உள்ள 24 நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கரோனா வைரஸினால் 50,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது.

-விளம்பரம்-

தற்போது இது உலகில் பல இடங்களில் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கரோனா வைரஸ் நாம் அன்றாடும் ஈடுபடும் செயல்களான கைகுலுக்குவது, கட்டிப் பிடிப்பது போன்ற முறைகளால் பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் இதை உலக மக்கள் அனைவரும் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, ‘எல்லோரும் வணக்கத்திற்கு மாறுங்கள். பழைய முறை என்றாலும் இது உலக மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் ஒரு சிறந்த வழி’ என பிரியங்கா சோப்ரா கைகூப்பி வணங்கும் புகைப்படங்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

Image result for coronavirus greeting namaste

இது இந்தியாவின் பாரம்பரிய முறை என்றும், உலக மக்கள் அனைவரையும் இந்த முறைக்கு மாறினால் பாதுகாப்பு, நல்லது என்றும் ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். இப்படி நடிகை பிரியங்கா சோப்ரா பதிவிட்ட இந்த ட்விட்டர் பதிவினை ரசிகர்கள் அனைவரும் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

Advertisement