காதலுனுக்காக நியூ யார்க் வீதியில் உப்பு மூட்டை சுமந்த பிரியங்கா சோப்ரா..!வீடியோ இதோ..!

0
282
Priyankachopra

பிரியங்கா சோப்ராவும் பிரபல அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனஸும், இந்த வருடத் தொடக்கத்திலிருந்து காதலித்து வருவதாகக் கிசுகிசு வெளியாகிவந்தது. இதை உறுதிசெய்யும் விதமாக, பிரியங்காவும் நிக் ஜோனஸும் பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருந்தன.

இப்படி ஒரு செய்தி வெளியானதும், சமூக வலைதள கலாசாரக் காப்பாளர்கள், இருவரின் ஜாதகங்களையும் அலசி, 10 பொருத்தங்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பிரியங்காவைவிட நிக் ஜோனஸ் 11 வயது இளையவர் என்ற `அதிர்ச்சி தகவலை’ வெளியிட்டு, `அட கொடுமையே! தன் பிள்ளை வயதில் இருப்பவரையா பிரியங்கா திருமணம் செய்துகொள்வது?’ என ஆதங்கப்பட்டனர்.

இருப்பினும் யாருடைய விமர்சனத்தையும் காதில் வாங்கிகொள்ளதா ப்ரியங்கா, நிக் ஜோன்சுடன் இன்னும் காதலில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது காதலர் நிக் ஜோன்சிற்காக, நிக் ஜோன்ஸ்சின் சகோதரியை நியூ யார்க் வீதியில் உப்பு மூட்டை ஏற்றி கொண்டு நடந்துள்ளார். அந்த வீடியோ பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார்.