லண்டனில் மெழுகு சிலை.! தீபிகா படுகோனுக்கு பின்னர் இந்திய நடிகைக்கு கிடைத்த பெருமை.!

0
853
Deepika-Padukone

பிரபல இந்தி நடிகையான பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகாளாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருகிறார். இந்தியில் பல்வேறு நடிர்களுடன் சேர்ந்து நடித்து வந்த பிரியங்கா சோப்ராவின் புகழ் தற்போது ஹாலிவுட் வரை கொடிகட்டி பறந்து வருகிறது.

nhr7kpmg

பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது சிறியவராக பிரபல ஹாலிவுட் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார் பின்னர் அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது பின்னர் அது பொய்யான தகவல் என்று தெரியவந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : ஆடை படத்தில் நானும் இருக்கேன்.! ட்வீட் செய்த ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.! 

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவிக்ரு நியூயார்க் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது சிலை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லண்டன் ரசிகர்களும், அவரது மெழுகுச் சிலையை காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

தங்க நிற ஆடையில் காட்சியளிக்கும் பிரியங்காவை காண, அவரது ரசிகர்கள் அதிகம் பேர், அருங்காட்சியகத்துக்கு வருவார்கள் என, டு சாட்ஸ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்தி நடிகையான தீபிகா படுகோனுக்கு இதே அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement