பொது நிகழ்ச்சிக்கு வித்தியாசமான உடையில் வந்து அனைவையும் கவர்ந்த ப்ரியங்கா சோப்ரா..! – புகைப்படம் உள்ளே

0
1061
priyankachopra

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பல ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் முடி சூடா ராணியாக இருந்து வருகிறார்.பிரியங்கா சோப்ரா. மிஸ் இந்தியா ஆகியன இவர் கலக்கி கொண்டு வருபவர். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

chopra

சமீபத்தில் ஹோலிவுட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 90வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது .மேலும் இந்து விருது வழங்கும் விழாவில் பல்வேறு ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பங்குபெற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்துகொண்டார்.

ஆஸ்கார் நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் அமெரிக்கா, நியூ யார்க் மாநிலத்தில் பிரபல வோக் பத்திரிகை நடத்திய மேட் கலா பெஷன் நிகழ்ச்சியின் சிவப்பு கம்பள விரிப்பில் பங்கேற்றார் நடிகை பிரியங்கா சோப்ரா. அந்த நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த ஆடை அங்கு இருந்த அனைவரயும் திரும்பி பார்க்க வைத்தது.

priyankha

ஒரு மெரூன் கலர் வெல்வெட் கவுன் போன்ற உடையில் இந்த விழாவிற்கு வந்திருந்த பிரியங்கா, தலையில் அந்த காலத்தில் ராணிகள் அணியும் ஒரு வகை நகையையும் அணிந்திருந்தார். பார்ப்பதற்கு அரபு நாட்டு நடிகைபோல காட்சியளித்த இவரை கண்டு அனைவரும் வியந்தனர். தற்போது அந்த புகை படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.