மணிமேகலை சர்ச்சைக்கு பிறகு தொகுப்பாளினி பிரியங்கா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஃபேவரட் தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா. சொல்லப்போனால் டிடிக்கு பிறகு ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருப்பது பிரியங்காவுக்கு தான். இவர் வாயாடி தொகுப்பாளினி என்று பெயர் எடுத்தவர். இவருடைய பேச்சும், சுட்டி தனமும் ரசிகர்களை சீக்கிரமாகவே கவர்ந்தது.
அதிலும் இவரின் பிரபலமே சிரிப்பு தான். இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல வருடங்களாக பிரியங்கா தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். பின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரியங்கா குறித்த தகவல்:
இதற்கிடையில் இவர் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா மிகத் திறமையாக விளையாடி, பல பிரச்சனைகளில் சிக்கி இருந்தாலும் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் நிகழ்ச்சியில் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா வழக்கம் போல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். தற்போது இவர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி:
இதை எடுத்து இவர் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார். இவர் தொகுப்பாளர் என்பதை விட நிகழ்ச்சியில் நன்றாக சமைத்து மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த சீசனின் டைட்டில் பட்டத்தையும் பிரியங்கா தான் வென்றிருந்தார். இருந்துமே மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை சில வாரங்களாக சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக இருந்தது.
மணிமேகலை-பிரியங்கா சர்ச்சை:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை, தன்னுடைய வேலையை பிரியங்கா செய்ய விட வில்லை. எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார் என்று பதிவிட்டு இருந்தார். இதனால் பலர் பிரியங்காவை விமர்சித்தும் மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்கள். இருந்தும் விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக கமெண்ட் போட்டு இருந்தார்கள். ஆனால், பிரியங்கா இதைப் பற்றி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.
பிரியங்கா பதிவு:
அதோடு நிகழ்ச்சி முடிந்த உடனே இவர் வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்று இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாவில் கழுகு இறக்கைகளுடன் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு, நான் என்னுடைய வாழ்க்கையில் பட்ட காயங்கள் எல்லாமே இப்போது மறைந்து விட்டது. என்னுடைய வளர்ச்சிக்கு ஒவ்வொரு கண்ணீர் துளியும் உதவி இருக்கிறது. நான் எழுவது எனக்காக மட்டும் இல்லை, என்னோட கனவுகளை நோக்கியும், ஒளியை நோக்கியும் செல்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.