ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா உடல் எடை குறைந்து இருப்பது குறித்து கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா நடிப்பாலும், தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். ஆனால், கடந்த ஆண்டு இவர் உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி போய் இருக்கிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோபோ ஷங்கர் ஏன் இப்படி ஒல்லியாக மாறிவிட்டார்? அவருக்கு ஏதாவது பிரச்சனையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். பின் இது தொடர்பாக ரோபோ சங்கர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்து இருந்தார்கள். தற்போது ரோபோ சங்கர் உடல் நலம் தேறி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அவரது மனைவியான பிரியங்காவும் முன்பை விட உடல் மெலிந்து காணப்பட்டு இருக்கிறார்.
ரோபோ சங்கர் மனைவி:
இதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி ரோபோ சங்கரை போல பிரியங்காவிற்கும் ஏதாவது உடலில் பிரச்சனையா? என்று கேள்வி எழுப்ப வந்தனர். இந்த நிலையில் தன்னுடைய உடல் எடை குறைப்பிற்கான காரணத்தை குறித்து விளக்கம் அளித்துள்ளார் பிரியங்கா. அதில் அவர், இப்போது நான் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருக்கிறேன். நான் டயட் மூலமாகத்தான் இந்த உடல் எடையை குறைத்தேன். எப்போதும் நான் வெந்நீர் குடிப்பது வழக்கமாக வைத்திருக்கிறேன்.
உடல் எடை குறைப்பு குறித்து சொன்னது:
என் உடலுக்கு டீடாக்ஸ் பானம் ரொம்ப ரொம்ப அவசியம் என்பதால் வெந்நீரில் பட்டையை ஊறவைத்து குடித்தேன். அதன் பின் சீரக தண்ணீர், தனியா தண்ணீர் போன்றவற்றையெல்லாம் டீடாக்ஸ் பானமாக குடித்தேன். பின்வாரத்தின் ஐந்து நாட்கள் புரோட்டின், பைபர், பழங்கள், கீரைகள், பச்சை காய்கறிகள், பயிர் வகைகள் எல்லாம் எடுத்துக் கொண்டேன். இது தவிர ஒர்கவுட், யோகா, வாக்கிங் எல்லாம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் செய்தேன். இதனால் தான் உடல் எடையை குறைத்தேன். மற்றபடி எனக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்.
ரோபோ சங்கர் குறித்த தகவல்:
மேலும், ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார்.
ரோபோ சங்கர் நடித்த படங்கள்:
கடந்த ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியாகியிருந்த இரவின் நிழல் படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜன்ட் படத்திலும் ரோபோ சங்கர் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பார்ட்னர். இந்த படத்தில் நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து சில படங்களில் ரோபோ சங்கர் கமிட்டாகி இருக்கிறார்.