தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகிய படம் மெர்சல். படம் வெளியாவதற்குள் பல்வேறு பிரச்சனை வர, அதனைத் தாண்டி எப்படியோ கடைசி நாளில் பிரச்சனையை முடித்துவிட்டு திபாவளிக்கு வந்தது.
படம் வந்ததும் பிரச்சனை ஓயவில்லை, தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சி தங்களைப் பற்றிய விமர்சனம் படத்தில் உள்ளதால் படத்தை எதிர்த்தது. அதையும் தாண்டி மெர்சல் சக்சஸ் வானத்தை தொட்டது.

இதையும் படிங்க: விஜய்யின் 14 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கப்பட வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்

Advertisement

இருந்தும் அட்லி இயக்கிய படம் என்றாலே காப்பி அடிக்கப்பட்டது போல் தான் இருக்கும் என்ற விமர்சனம் அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்தே வந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது வெளியான மெர்சல் படமும் அந்த மாதிரியான விமர்சனங்களை சந்தித்தது. அதற்கு இயக்குனர் அட்லியும் எதார்த்தமாக கதைகள் எப்படியும் சின்க் ஆவது வழக்கம் தான் என பதிலளித்தார்,
தற்போது அந்த விமர்சனங்கள் தாண்டி தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரஜினி நடித்த மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருக்கும் ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிருவனம் கொடுத்த புகாரின் பேரில் இந்த நோட்டிஸ் அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

நோட்டீஸ் அனுப்பியது மட்டுமல்லாமல், ரீமேக்கிங் இயக்குனர்களுக்கு மத்தியில் ஃப்ரீ மேக்கிங் இயக்குனர் என பட்டப் பெயரும் வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

Advertisement
Advertisement