‘கங்குவா’ படம் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு ஞானவேல் கொடுத்த பதிலடி- என்ன சொல்லி இருக்காரு பாருங்க

0
404
- Advertisement -

கங்குவா படத்தின் ரிலீசுக்கு பிறகு தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா அளித்து இருக்கும் பேட்டி விடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா.

-விளம்பரம்-

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா
தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், கங்குவா படத்தின் ரிலீசுக்கு முன்னாடி படத்தினுடைய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கண்டிப்பாக இந்த படம் 2000 கோடியை தாண்டும்.

- Advertisement -

கங்குவா படம்:

அதோடு இசை வெளியீட்டு விழா நடந்த இந்த இடத்திலேயே படத்தினுடைய சக்சஸ் மீட்டையும் நடத்துவோம். எல்லோருக்கும் சொல்லி அனுப்புறோம் என்றெல்லாம் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் உலகம் முழுவதும் கங்குவா படம் 40 கோடி வசூல் செய்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது படம் வெளியான பிறகு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் செம மாசாக போகிறது. மூன்று நாட்கள் தூக்கமே இல்லை புரமோஷனுக்காக அலைந்து இருந்தோம்.

தயாரிப்பாளர் பேட்டி:

படம் ரிலீசுக்கு பிறகு ரசிகர்கள் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. சூர்யா சாருடைய வாழ்நாள் வசூலை இரண்டே நாட்களில் கேரளா செய்துவிடும். அதேபோல் ஆந்திராவிலும் நல்ல வசூல். தமிழகத்திலும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. கன்னடத்திலும் வசூல் நன்றாக போகிறது. கண்டிப்பாக நல்ல வசூல் செய்யும். அதேபோல் கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எல்லாம் சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

படம் வசூல் குறித்து சொன்னது:

அப்படி எதுவும் இல்லை. ரசிகர்கள், மக்களுமே படம் பார்த்துவிட்டு நல்ல விமர்சனத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். சூர்யா சார், சிவா சாருக்கு நன்றியை சொல்லணும். இரண்டாம் பாகமும் இன்னும் பயங்கரமாக வரும். கண்டிப்பாக அடுத்த வருடம் படத்திற்கான வேலைகள் தொடங்கி விடும். எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். சூர்யா சார் மக்களுக்காக நன்றியையும் சொல்லி இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:

படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது.
அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement