சுசித்ரா சொல்வது உண்மையா? தயாரிப்பாளர் கே.ராஜன் கிளப்பிய அடுத்த புயல்

0
718
- Advertisement -

பாடகி சுசித்ரா விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கே ராஜன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள்.

-விளம்பரம்-
https://x.com/MuhilThalaiva/status/1791099773036183882

பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார்.

- Advertisement -

சுசித்ரா குறித்த சர்ச்சை:

அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதற்கு கார்த்திக் குமாரும் பதிலடி கொடுத்து வருகிறார். இருந்தாலும், தொடர்ந்து சுசித்ரா அவர்கள் பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர், தனுஷ், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பிரபல நடிகைகளை குறித்து பல சர்ச்சையான கருத்துக்களையும் கூறி இருக்கிறார்.

https://x.com/PhogatFilms/status/1791312998369480867

கே ராஜன் பேட்டி:

தற்போது சோசியல் மீடியாவில் சுசித்ரா விவகாரம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் கே ராஜன், சினிமாவிலும் சில தவறுகள் நடக்கிறதா என்று கேட்டால் நடக்கிறது. இதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சினிமாவுக்குள் வரும் சில நடிகைகள் தவறான வழிகளில் செல்கிறார்கள். இதெல்லாம் மறைமுகமாகத்தான் நடக்கிறது. ஆனால், இதை சுசித்ரா வெளிப்படையாக சொல்கிறார். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் நடிகைகளுடைய அந்தரங்க விஷயங்களை குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பயில்வான்-சுசித்ரா குறித்து சொன்னது:

இது தொடர்பாக கூட நான் கமிஷனர் ஆபீஸில் புகார் அளித்திருந்தேன். ஒரு தவறை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் செய்கிறார்கள். இதனை மறுக்கவே முடியாது. அதை ஏன் வெளிப்படுத்த வேண்டும். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் சுசித்ரா இப்போது ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார். மீடியாவில் தன்னைப் பற்றி பேச வேண்டும் என்று செய்கிறாரா என்று புரியவில்லை. இதை நான் கண்டிக்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்காக சட்டங்களும் அரசு கடுமையாக கொண்டு வந்திருக்கிறது. என்னுடைய கேள்வி, 5 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை இப்போது ஏன் அவர் சொல்ல வேண்டும்? ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காவல் துறையில் தாராளமாக புகார் கொடுக்கலாம். ஆனால், பொது வெளியில் சொல்வதற்கு காரணம் என்ன? சில பெண்கள் கொடுக்கும் தவறான தகவலால் தான் ஆண்களுமே பாதிக்கப்படுகிறார்கள்.

சினிமா குறித்து சொன்னது:

உங்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்காக சினிமா உலகமும் உதவும். நான் ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் இடம் பெண் சாபம் வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். சில நடிகைகளுக்கு என்ன கஷ்டமோ அவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். தப்பு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். ஆனால், செய்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும். சினிமாவில் பார்ட்டிகள் நடப்பதெல்லாம் உண்மைதான். அதேபோல் நடிகர், நடிகைகளும் குடிப்பது உண்மை. அதையெல்லாம் ஏன் பேச வேண்டும். அதோடு சுசித்ரா சொல்வது போல போதைப்பொருள் விற்பனை செய்வதெல்லாம் உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement