கட்சிக் கொடியின் கலரை த்ரிஷா மூலமா தான் அறிமுகப்படுத்தினார், விஜய் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜனின் சர்ச்சை பேச்சு

0
312
- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கும் வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கோட் பட செய்திகள் தான் அதிகமாக இணையத்தில் உலாவிகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் ‘கோட்’.

-விளம்பரம்-

இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படம், உலகமெங்கும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வசூல் சாதனை செய்து வந்தாலும், மற்ற மாநிலங்களில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தவெக கட்சி:

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று கட்சியின் பெயரை அறிவித்தார். மேலும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். தற்போது, கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ராஜன் நடிகர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியில் பேசியுள்ளார்.

கே. ராஜன் பேட்டி:

அதில் அவர், கோட் படத்தால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் எல்லாம் இல்லை. படம் வெளியான 4 ஆவது அல்லது 5 ஆவது நாளில் வசூல் அதிகரிக்க வேண்டும். ஆனால். கோட் படத்தின் வசூல் குறைந்துள்ளது. இதை அடுத்து விஜய் ‘தளபதி 69’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்குப் பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். ஆனால், அவர் எப்படி மக்களை நெருங்கப் போகிறார் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

ஏனென்றால், இப்போதே அவர் தனது கட்சித் தொண்டர்களையும் ரசிகர்களையும் அருகில் நெருங்க விடுவதில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதா செய்தது போல் 10 அடி தள்ளி நின்று தான் அவர் யாரையும் சந்திக்கிறாராம். அதோடு தனது பாதுகாப்பிற்காக துபாயில் இருந்து பவுன்சர்களை இறக்கியுள்ளாராம். இது எல்லாம் கட்சிக்கு பின் அடைவாக தான் இருக்கும்.

த்ரிஷா குறித்து சொன்னது:

அதேபோல், தனது கட்சிக் கொடியான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற சேலையை கட்டி த்ரிஷாவை கோட் படத்தில் ஆட வைத்திருக்கிறார். த்ரிஷா என்ன கட்சிக் கொள்கை பரப்புச் செயலாளராக?. த்ரிஷா கட்சிப் பணியில் அதிக ஈடுபாடாக இருப்பதாக தெரிகிறது. மேலும் கோட் படத்தில் விஜய், காந்தி என்று பெயர் வைத்திருக்கிறார்.உலகமே ஒரு பெரும் தலைவராக கருதும் காந்தியின் பெயரை வைத்துக் கொண்டால், அவர் அளவிற்கு விஜய் ஒழுக்கமானவரா?. காந்தியின் ஒழுக்கத்தில் ஐந்து சதவீதமாவது இவருக்கு இருக்கிறதா? என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் கே.ராஜன் பேசியுள்ளார்.

Advertisement