கமல் போன் பண்ணி சொன்னதுக்கு அப்புறம் தான் நான் அவரை அடிக்க போனேன் – தயாரிப்பாளர் சொன்ன ஷாக்கிங் தகவல். வீடியோ இதோ.

0
6309
kamal
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபல தயாரிப்பாளர் கே ராஜன். சமீபத்தில் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கமலஹாசனை வெளுத்து வாங்கியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, கமலஹாசன் போன் மூலம் வேண்டுதல் விட்ட பிறகு தான் நான் பர்மா பஜாருக்கு போனேன். ஆனால், அந்தத் துரோகி எனக்கு தெரியாது. ஏன் கே ராஜன் பர்மா பஜார் போனார் என்று சொல்லிவிட்டார். கமல்ஹாசன் ரஜினி மாதிரி எல்லாம் கிடையாது. ரஜினி ஒரு நல்ல மகனுக்குப் பிறந்த வெள்ளை உள்ளம் கொண்டவர். கமல் அப்படி கிடையாது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர். நன்றி என்பது கமலுக்கு கொஞ்சம் கூட கிடையாது.

-விளம்பரம்-

நான் கமலை பதினைந்து வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் பீச் கோர்ட்டுக்கு இப்பவும் போய்க்கொண்டிருக்கிறேன். அவர் சொல்லித்தான் நான் அடித்தேன். அதற்கு காரணம் கமல் தான். அந்த கலவரத்தை ஏற்படுத்தியது கமல் தான். ஆனால், என்னை கைது செய்தார்கள். கோலிவுட் சினிமா எனக்கு ஆதரவாக நின்றது. ஆனால், அந்த துரோகி கமலஹாசன் எனக்கு இந்த விஷயமே தெரியாது என்று சொல்லிவிட்டார். அன்று முதல் இன்று வரை நான் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

- Advertisement -

இன்று வரை கமல் எதுவுமே சொல்லவில்லை. அப்படிப்பட்டவர் யாருக்கும் உதவ மாட்டார். அவரால் கெட்டுப்போன பல தயாரிப்பாளர்கள் உள்ளனர். ஆனால், ரஜினியால் யாரும் இல்லை. ரஜினியால் 95% தயாரிப்பாளர்கள் வாழ்ந்து உள்ளார்கள். ஏதோ 5 சதவீதம் மட்டும் இப்படி அப்படி ஆகி இருக்கலாம். அது கூட அவரால் இல்லை. இயக்குனர்கள் செய்த தவறால் நடந்து இருக்கலாம்.

பேண்டவர் கமலகாசனை வெளுத்து விட்ட கே ராஜன்.. ????

Troll Kamalhassan ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಮೇ 8, 2020

நான் தேர்ந்தெடுத்து தான் ரஜினியிடம் வேண்டுகோள் வைத்தேன். நான் வேண்டுகோள் வைத்த இரண்டு மணி நேரத்திலேயே அவர் எனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னார். உதவி செய்கிறேன் என்று சொன்ன ரஜினியை நாம் வாழ்த்து தான் சொல்ல வேண்டும். அவரை குறை சொல்லக் கூடாது என்று கூறினார். கே ராஜன் கடந்த 2001 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சங்க பிரச்னையால் நடந்த பிரச்சனையில் ராஜனுக்கு எதிராக அப்போதைய தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கேயார் உண்ணாவிரதம் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்தபோது கே.ராஜன் அங்கு வந்தார். கை நிறைய ஆப்பிள்பழங்களுடன் வந்த அவர் நேராக கேயாரிடம் சென்றார். அவரிடம் ஆப்பிள் பழங்களைக் கொடுத்து விட்டுதிரையுலகினரின் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு உண்ணாவிரதப் போராட்டம் வேறு நடத்துகிறீர்களா என்று கேட்டதோடு உடன் இருந்த தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் நலசசங்கத்தின் பொருளாளர் முத்துக்கருப்பன் என்பவரையும் கண்ணத்தில் அறைந்தார் என்று அப்போது ராஜன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement