‘தளபதி 66’ படத்தின் கதை இது தான். தயாரிப்பாளரே சொன்ன தகவல் – விஜய் படத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் விஷயமே இல்லையே.

0
553
Vijay66
- Advertisement -

‘தளபதி 66’ படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு அளித்து இருக்கும் பேட்டி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம் பெற்று இருக்கிறது. கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்துக்கு எப்படி ஓகே சொன்னார்? என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இப்படி எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் பீஸ்ட் பெற்று இருந்தாலும் வசூலில் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் ரசிகர்களுக்கு பீஸ்ட் படம் வருத்தத்தை தந்திருக்கிறது என்றாலும் விஜய்யின் உழைப்பிற்காக அந்த படம் நன்றாக ஓடி இருக்கலாம் என்று கமமெண்ட் செய்து இருந்தார்கள்.

- Advertisement -

‘தளபதி 66’ படம் பற்றிய தகவல்:

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இருவரும் இணைந்து பல படங்களில் பணி புரிந்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது.

‘தளபதி 66’ படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். தளபதி 66 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அடுத்த கட்ட படபிடிப்புக்கு சென்று கொண்டு இருக்கிறது. அதோடு இந்த படத்தில் இரு அண்ணன் ரோலில் ஒருவராக ஷ்யாம் நடிக்கிறார். மற்றொருவர் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தளபதி 66 படம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் விஜய்யின் 66 படம் எப்படிப்பட்ட கதை என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு தயாரிப்பாளர் கூறியிருப்பது,

-விளம்பரம்-
Vijay Plans To Shoot Thalapathy-66 Only Tamil Nadu| தளபதி 66

தயாரிப்பாளர் தில் ராஜு அளித்த பேட்டி:

இது ஒரு பேமிலி என்டர்டைன்மென்ட் படம் தான். ஆக்சன், ரோமன்ஸ், எமோஷனலான குடும்ப கதையான படம் என்று கூறி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டியில், இந்த படத்தின் கதையை கேட்டு விஜய் என்னிடம் 20 வருடங்களுக்கு பிறகு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற ஒரு நல்ல கதையை கேட்டிருக்கிறேன் என்று சொன்னதாக கூறி இருந்தார். அதேபோல் சமீபத்தில் இயக்குநர் வம்சி அளித்து இருந்த பேட்டியில், விஜயின் 66-வது படம் ஆக்‌ஷன் படமாக இருக்காது. உணர்வுகள் நிரம்பிய வகையிலேயே அந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருந்தார்.

தளபதி 66 படம் குறித்த கருத்து:

இதை எல்லாம் பார்க்கும் போது தளபதி 66 ஒரு பக்கா பேமிலி படம் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. பெரும்பாலும் விஜய் படம் என்றால் ஆக்சன், மாஸ் தான். இதை தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள். கடைசியாக விஜய் நடித்த காதல்,பேமிலி படமான காவலன் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. விஜய் ரசிகர்கள் சில பேருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் தளபதி 66 படம் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக இருப்பதால் ரசிகர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement