என்னது தனுஷ் – அஜித் கூட்டணியில் படமா? தயாரிப்பாளர் சொன்ன அப்டேட் – என்ன தெரியுமா?

0
119
- Advertisement -

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது படம் ஆகும். இந்த படத்தில் சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த ராயன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனை செய்தது.

- Advertisement -

தனுஷ் திரைப்பயணம்:

இதை அடுத்து தனுஷ் அவர்கள் தன்னுடைய சகோதரியின் மகன் பவிஷை ஹீரோவாக வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், சதீஷ், வெங்கடேஷ், ரம்யா ரங்கநாதன், சரண்யா பொன்வண்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

தனுஷ்-அஜித் கூட்டணி:

இதை அடுத்து தனுஷ் அவர்கள் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு D55 என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதை அடுத்து லப்பர் பந்து படத்தினுடைய இயக்குனர் தமிழரசன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல் தனுஷ், அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தயாரிப்பாளர் ஆகாஷ் கொடுத்த விளக்கம்:

சமீபத்தில் அளித்த பேட்டியில் டவுன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ், அஜித்-தனுஷ் கூட்டணிக்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அஜித் ஓகே சொன்னால் கண்டிப்பாக இந்த படம் உறுதியாகும் என்று கூறியிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித்.

அஜித் திரைப்பயணம்:

கடைசியாக சமீபத்தில் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’. இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Advertisement