வாய்ப்புக்காக கதை கதையா சொல்லுவாரு, வடிவேலு-கோவை சரளா ஜோடி உருவான விதம்- தயாரிப்பாளர் வி.சேகர் சொன்ன தகவல்

0
378
- Advertisement -

வடிவேலு, கோவை சரளா ஜோடி உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் வி.சேகர் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களாக வடிவேலு, கோவை சரளா திகழ்கிறார்கள். இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதோடு படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருக்கும்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர்களுடைய ஜோடி உருவான விதம் குறித்து தயாரிப்பாளர் வி.சேகர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் வடிவேலு என்னிடம் அடிக்கடி வந்து உங்கள் படத்தில் நான் நடிக்கணும் என்று வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்கு நான், என்னிடம் நிறைய காமெடியன்கள் இருக்கிறார்கள். உன்னை என்னுடைய படத்தில் கமிட் செய்தால் கொஞ்சம் சீன்கள் தான் இருக்கும் என்று சொன்னேன்.

- Advertisement -

தயாரிப்பாளர் வி.சேகர் பேட்டி:

அதற்கு வடிவேலு, கொஞ்சம் சீன் இருந்தாலுமே பரவாயில்லை, சம்பளமே வேண்டாம். ஆனால், உங்கள் படத்தில் எனக்கு நடிக்கணும் என்று கேட்டார். அப்படியே நிறைய கதை சொன்னார். அதற்குப் பின்னால் அவரை ஒரு நாள் வரச் சொன்னேன். அப்போது அவர் ரொம்ப ஒல்லியாக இருந்தார். அவர் ராஜ்கிரண் படத்திலும், கமலுடைய தேவன் மகன் படத்திலிருந்து நடித்திருந்தார். தேவர்மகன் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதற்குப் பிறகுதான் வடிவேலுவை வைத்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ படத்தில் கமிட் செய்தேன்.

வடிவேலு குறித்து சொன்னது:

சூட்டிங் இல்லாத நேரங்களில் அவர் மதுரையில் நடக்கும் விஷயங்களைப் பற்றி நிறைய சொல்லுவார் அப்போது அவரிடம் நிறைய சரக்கு இருக்கிறது என்று எனக்கு தோணுச்சு. இதனால் இவரை எப்படியாவது தூக்கி விடலாம் என்றெல்லாம் யோசித்து இருந்தேன். பின் அவருக்கு ஜோடி போடலாம் என்று முடிவு செய்து கோவை சரளாவை யோசித்தேன். இது குறித்து கோவை சரளா விடமும் கேட்டேன். அவர் அப்போது பாக்யராஜ், கமல் படத்தில் எல்லாம் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

கோவை சரளா குறித்து சொன்னது:

பின் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து கோவை சரளா இடம் கேட்டேன். அதற்கு அவர், நான் பெரிய ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். புதுமுக நடிகர்களுடன் எப்படி நடிப்பது? என்று தயங்கினார். பின் எப்படியோ அவரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டேன். அதற்குப் பின் கவுண்டமணி, செந்தில் போன்ற நடிகர்கள் வடிவேலு உடன் கோவை சரளா நடித்தால் இனி எந்த படத்திலும் நாங்கள் அவருடன் நடிக்க மாட்டோம் என்றெல்லாம் தேவையில்லாத வேலை செய்தார்கள்.

கோவை சரளா-வடிவேலு உறவு:

அதை பார்த்து கோவை சரளா பயந்து, நான் வடிவேலுடன் நடக்கவில்லை என்று சொன்னார். அதற்கு பிறகும் நான் அவரை சமாதானம் செய்தேன். பின் சம்பளத்தையும் அதிகமாக கொடுத்தேன். அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் பின் நாயாக அலைந்து திரிந்தேன். ஒரு வழியாக வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க கோவை சரளா சம்மதித்தார். அதற்கு பிறகுதான் அவர்களுடைய காம்பினேஷனில் படங்கள் வெளியே வந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருமே காதலிக்க ஆரம்பித்தார்கள். கல்யாணம் வரையும் சென்றார்கள். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார்.

Advertisement