PSBB பள்ளி பத்தி இவ்ளோ பெருமை பேசும் மதுவந்தி பையன் எந்த ஸ்கூல்ல படிக்கிறார் தெரியுமா ? நீங்களே பாருங்க.

0
11730
madhuvanthi
- Advertisement -

சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போலிசாரால் கைது செய்ப்பட்டுள்ளார்.

-விளம்பரம்-

மேலும், விசாரணையில் அவர் மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்துவந்துள்ளதாக வாக்குமூலமும் அளித்துள்ளார்.சமீபத்தில் மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ராஜகோபால் பள்ளியில் பணிபுரியும் ஓர் ஆசிரியர். அவர் செய்தது மன்னிக்க முடியாத தவறு அதற்கு அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பது எந்த மாற்றமும் இல்லை. ஆனால்,  ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்று தான் புகார் வந்துள்ளது.

இதையும் பாருங்க : பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருதா – கடுப்பான தனுஷ் பட நடிகை.

- Advertisement -

ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள்.என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது. அவங்க பேருக்கோ, இல்லை இந்த பள்ளியின் மரபுக்கோ எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்.அது என்னுடைய பள்ளிதான், ஏனென்றால் நான் அங்கு தான் படித்தேன். ஆனால், அந்த பள்ளியை நானோ என் அப்பாவோ நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதே பள்ளியில் தான் பள்ளியில் தான் இசை புயல் ஏ ஆர் ரகுமான் கூட படித்தார் இப்போ அவர் எந்த நிலைமையில் இருக்கார் என்று பேட்டி ஒன்றில் கூட பேசி இருந்தார் மதுவந்தி . இப்படி தங்களின் குடும்பத்திற்கு சொந்தமான பள்ளியின் பெருமை பற்றி பேசும் ஆனால் மதுவந்தியின் மகன் PSBB பள்ளியில் படிக்கவில்லை. அவர், ஊட்டில் உள்ள Good Shepherd International School-ல் தான் என்று நெட்டிசன்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement