பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருதா – கடுப்பான தனுஷ் பட நடிகை.

0
3068
vairamuthu
- Advertisement -

கவிஞர் வைரமுத்துவிற்கு கேரளாவின் மிக உயரிய விருதான ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு மலையாள நடிகை பார்வதி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ. என். வி. இலக்கிய விருது சிறந்த மலையாள கவிஞரும், பாடலாசிரியருமான ஓ.என்.வி. குரூப் நினைவாக கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது முதல்முறையாக, ஒரு தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக ஞானபீடம் பெறும் கவிஞர்களுக்கே ONV இலக்கிய விருது வழங்கப்பட்டு வரும் சூழலில், வைரமுத்துவின் இலக்கிய சேவையை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வைரமுத்துவிற்கு இந்த விருது கிடைத்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி, பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருதா என்று ஆவேசம் அடைந்துள்ளார்.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன் தந்தை இறந்தததுக்கு முக்கிய காரணம் ஜெயலலிதா தான். அவர் மட்டும் ஒரு கையழுத்து போட்டிருந்தால் – நக்கீரன் கோபால்.

- Advertisement -

வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல பல பெண்களும் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக வைரமுத்து மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இவருக்கு ஓஎன்வி இலக்கிய விருது வழங்கப்பட்டதற்கு மலையாள நடிகை பார்வதி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பார்வதி, ஓஎன்வி அவர்கள் எங்களின் பெருமை. கவிஞராகவும், பாடலாசியராகவும் அவர் வழங்கிய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாது. அவரது பணியால் நம் இதயங்களும், மனங்களும் நிறைந்தன. இப்படியிருக்கையில், ஒரு பாலியல் வன்கொடுமை புகாருக்குள்ளானவருக்கு ஓஎன்வி விருது வழங்குவதா ? அவரது பெயரில் இவருக்கு விருது வழங்கி மரியாதை செலுத்தினால், அது மிகுந்த அவமரியாதையாகும் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement