யூடுயூபில் மிகவும் பிரபலமான கேமரான மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து வரும் Player’s Unknown Battle Ground’ என்பதைச் சுருக்கமாக,PUBG’ என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இணைந்து, அந்த விளையாட்டின் விதி.அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும்.

இந்த விளையாடினால் பல இளசுகள் அடிமையாகி கிடக்கின்றனர். இந்த விளையாட்டில் சில அம்சங்களை பேர பல சிறுவர்கள் வீட்டிற்கு தெரியாமல் பல லட்சம் பணத்தை செலவு செய்த கதையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு பப்ஜி, பப்ஜி மொபைல் லைட், வீசாட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்து இருந்தது.

Advertisement

இந்த 118 தடை செய்யப்பட்ட செயலியில் பப்ஜி விளையாட்டை தடை செய்தது தான் இளசுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கொரியன் வெர்ஷன் மற்றும் VPN -ஐ பயன்படுத்தி பலர் விளையாடி வருகின்றனர். இந்த பப்ஜி விளையாட்டை தடை செய்த முன்பே இதனை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து தமிழ்நாடு இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் மதன் என்ற யூடுயூபர். விளையாடும் போது எதிரிகளை ஆபாசமாக பேசுவது தான் இவரது வழக்கம்.

பொதுவாக யூடுயூப் சேனல்களில் சூப்பர் சாட் என்ற அம்சத்தை பயன்படுத்தி பாலோவர்கள் தங்களால் முடிந்த பணத்தை அனுப்புவார்கள். இப்படி ஒரு நிலையில் தனது விளையாட்டு திறன் மற்றும் வாய் சாமர்த்தியத்தின் மூலம் சிறுவர்ககளை கவர்ந்த மதனுக்கும் சூப்பர் சாட் மூலம் பல சிறுவர்கள் பணம் அனுப்பியுள்ளனர். அது போக கேம் விளையாடிகொண்டு இருக்கும் போது பள்ளி வயது மாணவிகளை மதன் ஆபாசமாக திட்டயதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement

அதே போல toxic madhan 18 + என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் மதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் கேம் விளையாடி கொண்டு இருக்கும் போது இளம் பெண் ஒருவரை படு ஆபாசமாக திட்டியுள்ளார். அதே போல விளையாடிக்கொண்டு இருக்கும் போது ஆதரவற்றோர்களுக்கு உதவி அளிக்க தனது பாலோவர்களிடமும் கேட்க, பலரும் பல ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் மதன் மீது சிறுவர்களிடம் பணம் பறிப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது போன்ற குற்றத்திற்காக மதன் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement