நான் சிம்புவின் கிளாஸ் மேட், மன்மதன் லிஸ்ட்ல என் பேர் சிம்பு இதுக்கு தான் வச்சார் – தனுஷ் பட நடிகை.

0
1074
Aparna
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் நடித்து மக்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் படங்களில் ஒன்று தான் புதுக்கோட்டையிலிருந்து சரவணன். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை எஸ்எஸ் ஸ்டான்லி இயக்கியிருந்தார். இந்த படத்தை எஸ்கே கிருஷ்ணகாந்த் தயாரித்திருந்தார். இந்த படத்தில் தனுஷ், அபர்ணா பிள்ளை, கருணாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் தனுஷிற்கு வெற்றி பெற்று தந்தது.

-விளம்பரம்-
aparna pillai

மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக சாலினி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணா பிள்ளை நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் என்று சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து இவர் ஏபிசிடி, நெஞ்சில் ஜில் ஜில், கண்ணுக்குள்ளே போன்ற பல படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் மலையாளம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

டாக்டருடன் திருமணம் :

அதற்கு பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் 2011 ஆம் ஆண்டு பரணி என்ற டாக்டரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அபர்ணா பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மிஸ் சென்னை ஆன போது தான் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அதற்கு பிறகு USAவில் இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு போட்டி நடந்தது. அதில் நான் கலந்து இருந்தேன்.

aparna pillai

நடிக்க வந்தது எப்படி :

அப்போது அதை ஆர்டிகலாக நியூஸ்ஸில் வெளியிட்டு இருந்தார்கள். அதை பார்த்து தான் என்னை படத்தில் நடிக்க கேட்டார்கள். அதோடு நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் எனக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை. பின் என்னை கன்வைன்ஸ் பண்ணி படத்தில் நடிக்க வைத்தார்கள்.அந்த படத்தில் நான் கிளாமராக தான் நடித்திருந்தேன். அதற்குப் பிறகும் நான் பல படங்களில் கிளாமராக தான் நடித்தேன். பின் வந்த வாய்ப்புகள் எல்லாம் அதே மாதிரி வந்தது. நான் அதை குறை சொல்லவில்லை. இயக்குனர்கள் மக்களுக்கு என்ன தேவையோ அதை தான் சினிமாவாக கொடுக்கிறார்கள்.

-விளம்பரம்-

பிறந்தநாளில் கல்லறையில் காட்சி :

அது நமக்கு பிடித்திருந்தால் செய்யலாம் இல்லை என்றால் நம் அடுத்த வேலையை பார்த்துட்டு போகலாம். இது சரி தவறு என்று நான் சொல்லவில்லை. அதனால் யாரையும் குறை சொல்ல முடியாது. அதே போல் நான் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது கல்லரை மேல் உட்கார்ந்து இருக்கிற மாதிரி ஒரு சீன் வரும். அன்னைக்கு என்னுடைய பிறந்தநாள் நாள் என்று கூறியுள்ளார்.

வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும்

சிம்புவின் கிளாஸ் மேட் :

அதே போல சிம்பு என்னுடைய பள்ளி தோழன். மன்மதன் படத்தில் அபர்ணா என்ற ஒரு பெண்ணை கொன்றுவிடுவார் அதை என்னை நினைத்து தான் வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன். தற்போது நான் சீரியல் ப்ரொடியூஸ் பண்றது என்று இறங்கினேன். நான் ப்ரொடியூஸ் பண்ண சீரியல் 2000 எபிசோடை தாண்டி போனது. அந்த சேனலுக்கு ரொம்ப பெருமையாக இருந்தது என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement