முதுச்சேரி முதல்வர் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியிடம் பெண் ஒருவர் கூறிய குறையை மாற்றி மொழி பெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரியில் இன்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற் கொண்டு வருகிறார். இதற்காக சென்னை வருகை தந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதுச்சேரியில் மீனவர்கள், மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடி மக்களின் குறையையும் கேட்டு அறிந்தார்.

மீனவ மக்கள் தமிழில் சொன்ன குறைகளை ராகுல் காந்தியிடம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி. ராகுல் காந்தியிடம் பெண், ஒருவர் ‘கடலோர பகுதி இப்படியே தான் இருக்கிறது. எங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்க மாற்றங்க. அவரே (நாராயணசாமி) இருகாரே புயல் சமயத்தில் எங்களை வந்து பார்த்திருக்காரா ? என ஆதங்கத்துடன் கூறினார். அதனை ராகுல் காந்தியிடம் மொழி பெயர்த்த நாராயணசாமி ‘புயல் சமயத்தில் நான் இங்கே வந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்தேன் அதை தான் அவர் கூறுகிறார்’ என்று கூறினார்.

இதையும் பாருங்க : என்ன நடக்குது இங்க – புகழுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த தர்ஷா. பவித்ரா செய்த கமன்ட். அதற்கு தர்ஷா கொடுத்த பதிலை பாருங்க.

Advertisement

இப்படி மக்கள் தன் மீது சொன்ன குறையை நல்ல முறையாக ராகுல் காந்தியிடம் நாராயணசாமி சொன்னதை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர். ராகுல் காந்தியின் பேச்சை தவறுதலாக மொழி பெயர்ப்பது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி கேரளாவில் பிரச்சாரம் செய்த போது முன்னாள் ராஜ்யா சபா துணை தலைவர் பிஜே குரியன், ராகுல் காந்தி பேச்சை மொழி பெயர்க்கத் திணறினார்.

அதே போல அதே 2019 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, ராகுல் காந்தியின் பேச்சை முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் பேச்சை, தங்கபாலு சரியான முறையில் மொழி பெயர்க்கவில்லை. அந்த வீடியோ மிகுந்த கேலிக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அதே போல காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement
Advertisement