என்ன நடக்குது இங்க – புகழுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்த தர்ஷா. பவித்ரா செய்த கமன்ட். அதற்கு தர்ஷா கொடுத்த பதிலை பாருங்க.

0
1701
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-

இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். அதிலும் புகழ் பற்றி சொல்லவா வேண்டும்.

இதையும் பாருங்க : என் கோவிலை இப்படி மாற்றி விடுங்கள் – தனது ரசிகர்களுக்கு ஈஸ்வரன் பட நடிகை வேண்டுகோள்

- Advertisement -

இந்த சீசனில் புகழ் காமெடி ஒரு பக்கம் இருந்தாலும் ரொமான்ஸும் வேற ரகம் தான். முதல் சீசனில் ரம்யா பாண்டியனை கரெக்ட் செய்ய புகழ் என்னன்னவோ வித்தை செய்து பார்த்தார், அது ஒன்றும் ஒர்க் அவுட் ஆகவில்லை.அதே போல இந்த சீசனில் தர்ஷா மற்றும் பவித்ரா இருவரிடமும் தான் புகழ் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதில் தர்ஷா குப்தா ஏற்கனவே வெளியேறிவிட்டதால் தற்போது பவித்ராவிடம் தான் புகழ் தனது வேடிக்கையான ரொமான்ஸ் சேட்டைகளை செய்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை தர்ஷா குத்பா ‘Kpy காமெடி திருவிழா’ நிகழ்ச்சியில் புகழுடன் எடுத்த சில ரொமாண்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதை பார்த்த பவித்ரா, என்ன நடக்குது இங்க என்று கமன்ட் செய்ய அதற்கு தர்ஷாவும் ‘இப்போவது புரிஞ்சிக்கோ செல்லம், யார புகழுக்கு புடிக்கும்னு’ என்று பதில் அளித்தார். பின்னர் பவித்ரா, நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள், நல்லா இருங்க. என் டார்லிங் புகழ்க்கு ஒரு முடி கூட கொட்டாம பத்திரமா பாத்துக்கோங்க தர்ஷா’ என்று வேடிக்கையாக கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement