கைகொடுக்காத சினிமா, மீண்டும் விஜய் டிவி பக்கமே ஒதுங்கிய புகழ் ? அதுவும் எந்த நிகழ்ச்சியில் பாருங்க.

0
400
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதற்குப்பின் இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. அந்த வகையில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். இந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது.

- Advertisement -

என்ன சொல்ல போகிறாய் படம்:

சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

புகழ் நடித்து உள்ள படங்கள்:

தற்போது அஜித்தின் வலிமை அருண் விஜயின் யானை போன்ற பல படங்களில் புகழ் நடித்து முடித்துள்ளார். இதனிடையே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. இதில் புகழ் வராததை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் நடுவர்களுக்கு பதிவு போட்டிருந்தார்கள். அதற்கு நடுவர்களும் நிச்சயம் புகழ் வருவார், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழுக்கு பட வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் விஜய் டிவி பக்கம் புகழ் கரை ஒதுங்கி ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

இந்த முறை யாரும் எதிர்பார்க்காத புதிய நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்ள இருக்கிறாராம். அப்படி என்ன நிகழ்ச்சி என்றால், இன்னும் சில தினங்களில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. இது பிக் பாஸ் வீட்டை 24 மணி நேரமும் பார்க்க முடியும். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்கள். தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் ஜனவரி 30 ஆம் தேதி 6. 30 மணிக்கு துவங்க இருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புகழ்:

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பெயர்கள் சமூக நிகழ்ச்சியில் அடிபட்டு வருகிறது. மேலும், இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டும் தான் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் புகழும் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, புரோமோ எல்லாம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை அறிந்தவுடன் புகழ் ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆகமொத்தம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியே கலகட்ட போகுது என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement