குடும்பத்தின் முக்கிய நபரிடமே புனீத் ராஜ்குமார் இறந்ததை கூட மறைத்த குடும்பம் – இது தான் காரணமாம்

0
737
puneeth
- Advertisement -

கன்னட திரையுலகில் பவர் ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் இவர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் புனித் ராஜ்குமாருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து இருந்தார்கள். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

-விளம்பரம்-
Power Star Of Kannada Cinema Puneeth Rajkumar Passes Away

புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவர் நடிகராக மட்டுமல்லாமல் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதே போல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக வழிவகை செய்துள்ளார். இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

- Advertisement -

புனித் ராஜ்குமாரின் சமூக சேவைகள்:

அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார்.
அதுவும் அவர் தானமாக வழங்கி சென்ற கண்கள் மூலம் 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. இப்படி புனித் ராஜ்குமாரின் மறைவு கன்னட திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகினர் அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவருடைய மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் அஞ்சலியை செலுத்தி இருந்தார்கள். இந்நிலையில் புனித் ராஜ்குமார் இறந்த தகவலை இன்னும் அவருடைய அத்தைக்கு சொல்லவில்லை என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புனித் ராஜ்குமாரின் அத்தை பற்றிய தகவல்:

புனித் ராஜ்குமார் உடைய அத்தையின் பெயர் நாகம்மா. தற்போது இவருக்கு 90 வயதாகிறது. இவர் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமாரின் சகோதரி ஆவார். மேலும், நாகம்மாவின் இளமைப்பருவத்தில் புனித் ராஜ்குமாரை அக்கறையுடன் பாசத்துடன் பார்த்துக் கொண்டவர். இவர் அப்பு என்று தான் புனித் ராஜ்குமாரை செல்லமாக அழைப்பார். நடிகர் புனித் ராஜ்குமாரும் கர்நாடகா கஜனூர் கிராமத்தில் உள்ள அவரின் அத்தை வீட்டிற்கு அடிக்கடி செல்வாராம். ஆனால், அவரின் அத்தையிடம் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியை கூறாமல் ரகசியமாக மறைத்து வைத்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

நாகம்மாவிடம் புனித் இறந்த செய்தி மறைத்த காரணம்:

அதுமட்டும் இல்லாமல் குடும்ப நபர்கள் எவரேனும் நாகம்மாவை பார்க்க சென்றால் அவர்களிடம் புனீத் பற்றி பேச வேண்டாம் என்று கூறி விடுவார்கள். புனித் ராஜ்குமாரின் சகோதரர் ராகவேந்திரா ராஜ்குமார் சமீபத்தில் அவரின் அத்தை வீட்டிற்கு செல்லும்போது கூட புனித் இறந்த செய்தியை கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து புனித் ராஜ்குமாரின் குடும்ப நபரிடம் விசாரித்தபோது அவர் கூறியிருப்பது, நாகம்மா அவர்கள் புனித் ராஜ்குமாரை நினைக்கும் போது எல்லாம் அவரை பற்றி கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்று கூறி விடுவோம். நாகம்மா புனித் ராஜ்குமாரின் திரைப்படங்களை பயங்கரமாக விரும்பிப் பார்ப்பார்.

விளக்கம் கொடுத்த புனித் ராஜ்குமாரின் குடும்பம்:

அதனை வைத்து நாங்கள் சமாளித்து வருகிறோம். சில வருடங்களுக்கு முன்பு ராகவேந்திரா ராஜ்குமார் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தியை நாகம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி நாகம்மா ராஜ்குமாரின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியை நாகம்மவால் தாங்கி கொள்ள முடியாது. அதனால் தான் நாங்கள் புனித் ராஜ்குமார் இறந்த செய்தியை ரகசியமாக மறைத்து வைத்து இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

Advertisement