இதெல்லாம் என்ன அசிங்கம்.! செந்தில் – ராஜலக்ஷ்மியை கழுவி ஊற்றிய பூஸ்பவனம் குப்புசாமி.!

0
1210
Pushpavanam

சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். தற்போது இவர்கள் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.

Senthil Ganesh

இந்த நிலையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியனரையும், விஜய் டிவியையும் கடுமையாக தாக்கி பேசியுள்ளார் பிரபல நாட்டுபுற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. நாட்டு புற பாடல்களில் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மியை விட புஷ்பவனம் குப்புசாமி சூப்பர் சீனியர்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புஷ்பவனம் குப்புசாமி, பேசுவது எல்லாம் இரட்டை அர்த்தம், ஆபாசம்.. மக்கள் இசை கலைஞன் என ஒருவர் பாடுகிறான். மேடை முழுவதும் ஆபாசம். மனைவியை பக்கத்தில் வைத்துகொன்டே வேறு ஒரு பெண்ணிடம் அசிங்கமாக சைகை செய்கிறான். யூடியூப்பில் பார்த்து நொந்துபோனேன்.

இவர்களை பார்க்கும்போது இந்த துறையில் நாமும் இருக்க வேண்டுமா? பேசாமல் பாடுவதை நிறுத்திவிடலாமா என்று கூட யோசிக்கிறேன். அதிலும் அவர்கள் இருக்கும் டிவி ரியாலிட்டி ஷோகளில் நடப்பது எதுவும் ரியாலிட்டி இல்லை. யார் வெற்றி பெற வேண்டும் என முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் அனைத்து விஷயங்களையும் செய்து அவர்களை வெற்றி பெற வைக்கிறார்கள் என்று மிகவும் கடுமையாக பேசியுள்ளார் புஷ்பவனம் குப்புசாமி.

-விளம்பரம்-
Advertisement