தனுஷ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பிள்ளை. அதன் பின்னர் ABCD, கண்ணுக்குள்ளே போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சென்னையை பூர்விகமாக கொண்ட இவர், சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். மேலும், இளம் வயதிலேயே தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அஞ்சர பேட்டி’நிகழ்ச்சியை தயாரித்துள்ளார். மேலும், இவர் நிகழ்ச்சிகளை இயக்கியும் உள்ளார்.
ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற கேம் ஷோவையும் இவர் தயாரித்து இயக்கியும் உள்ளார். இதுவரை 4 தமிழ் படங்களிலும் ஒரே ஒரு மலையாள படத்தில் நடித்துள்ள இவரால் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.
பின்னர் நடிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் பிறந்தது. தற்போது ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் அபர்ணா.