கௌதமியால் கமலுக்கு நேர்ந்த பிரச்சனை. பாஸ்போர்ட்டால் வந்த குழப்பம்.

0
16736
- Advertisement -

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியர்களை வீடுகளை அடையாளம் காண மாநகராட்சியால் வீட்டின் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸையும் ஓட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கமல் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

-விளம்பரம்-
kamal

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டின் முன்பு இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது பொதுவாக மார்ச் 1 முதல் வெளிநாட்டு பயணம் செய்தவர்கள் வீட்டின் முன்னர்தான் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஆனால், மார்ச் 1 முதல் கமல் இந்தியன்2 படப்பிடிப்பிற்காக இந்தியாவில் தான் இருந்து வந்தார். இப்படி இருக்க எப்படி கமல் வீட்டின் முன்பு இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.

- Advertisement -

ஆனால், இந்த ஸ்டிக்கரை கௌதமி வீட்டில் ஒட்டப்படுவதற்கு பதிலாக கமலின் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுவிட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துளர்த்து. இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்த போது நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கவுதமி அங்கு இல்லை என்பதால் நோட்டீஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவரின் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமை படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லை என்பதும் அவ்விடத்தில் மக்கள் நீதி மையத்தில் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

எனவே, நான் தனிமைப்படுத்தப்பட்ட தாக வரும் செய்திகள் உண்மை அல்ல என்பதையும் வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தல் கொண்டிருக்கிறேன் என்பதையும் அன்பு உள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement