இதுவரை மூன்று முறை இந்தியா வந்துள்ள ராணி எலிசபத் – கமலின் மருதநாயகம் ஷூட்டிங் சபாட்டிற்கு எப்படி வந்தார் ?

0
408
Queen Elizabeth II
- Advertisement -

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் வயது 96. வயது முதுமை காரணமாக அவரது உடல்நிலை பாதிப்படைந்திருந்தது. மருத்துவர்களின் தீவிரமாக கண்காணிப்பில் இருந்த நிலையில் ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவிற்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் எலிசபத் ராணி கமலின் மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட்டை காண வந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

எலிசபெத் ராணி இந்தியாவிற்கு இதுவரை மூன்று முறை வந்து இருக்கிறார். இந்திய விடுதலைக்குப் பின் 15 ஆண்டுகள் கழித்து தான் எலிசபெத் முதல்முறையாக இந்திய வந்துள்ளார். 1961ஆம் ஆண்டு தனது கணவர் பிலிப்புடன் இந்தியா வந்த எலிசபெத் தாஜ்மகால், ராஜ்காட்டில் உள்ள அன்னல் காந்தி சமாதி ஆகியவற்றை பார்வையிட்டார். அத்துடன் காந்தி சமாதியில் தனது வருகையை அங்குள்ள பதிவேட்டில் குறிப்பிட்டு கையெழுத்து இட்டார். பின்னர் மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்றார்.

- Advertisement -

ராணி எலிசபெத்தின் இந்திய பயணங்கள் :

1983 ஆம் ஆண்டு தனது கணவருடன் மீண்டும் இந்தியா வந்த ராணி எலிசபெத். அன்றைய குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கினார். மேலும், அன்னை தெரசாவை சந்தித்து அவருக்கு மரியாதை செலுத்தினார். தனது 3ஆவது பயணமாக நாட்டின் 50ஆவது சுதந்திர தின விழா ஆண்டான 1997இல் இந்தியா வருகை தந்தார். அப்போது தான் கமலின் மருதநாயகம் படப்பிடிப்பை சுற்றிப்பார்த்தார்.

மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட் :

மூன்றாவது பயணமாக இந்தியா வந்த எலிசபெத் ராணி தமிழகத்திற்கும் விசிட் அடித்தார்.பின்னர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தின் செட்கள் இருந்த சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டிக்கு வருகை தந்து ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். . இதன் காரணமாக அப்போதே இந்த படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

-விளம்பரம்-

ராணியின் கடைசி இந்திய பயணம் :

இதுவே ராணி எலிசபெத் இந்தியா வந்த கடைசி பயணம் ஆகும். இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது. ராணிக்கு மட்டுமல்ல மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்களும் அது மட்டும் தான். தற்போது எலிசபத் ராணியின் மறைவை தொடர்ந்து இந்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாதியில் நின்ற படம் :

1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின. 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது. அப்போதே மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கூட அப்போது வெளியாகி இருந்தது. இந்த படத்தை எடுப்பதற்காக மற்ற படங்களில் சம்பளமாக பெற்ற பணத்தை எல்லாம் இந்த படத்தில் தான் போட்டார். சொல்லப்போனால் இந்த படத்திற்காக அப்போதே கமல் பல கொடிகளை செலவு செய்து இருந்தார்.

Advertisement