மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட்டை 20 நிமிடம் சுற்றி பார்த்த இங்கிலாந்து ராணி, கலைஞர். அறிய புகைப்படம் இதோ.

0
2689
marudha
- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படும் கமலின் மருதநாயகம் திரைப்படம் கைவிடபட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். 1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின. 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது. அப்போதே மிகவும் பிரம்மாண்ட பொருட் செலவில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள் எல்லாம் கூட அப்போது வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது. படத்தின் படப்பிடிப்புகளையும் கமல் நடத்தி வந்தார். இந்த படத்தை எடுப்பதற்காக மற்ற படங்களில் சம்பளமாக பெற்ற பணத்தை எல்லாம் இந்த படத்தில் தான் போட்டார். சொல்லப்போனால் இந்த படத்திற்காக அப்போதே கமல் பல கொடிகளை செலவு செய்து இருந்தார்.

இதையும் பாருங்க : ப்பா முதல் படத்திலேயே இப்படி ஒரு கிளாமரா – வைரலாகும் வரலக்ஷ்மி புகைப்படங்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். எலிசபெத் ராணியுடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இதன் காரணமாக அப்போதே இந்த படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது. ராணிக்கு மட்டுமல்ல மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்களும் அது மட்டும் தான். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  “பிறந்தது பனையூரு மண்ணு, மருதநாயகம் என்பது பேர்களில் ஒண்ணு” என்ற கமல் எழுதிய பாடல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

-விளம்பரம்-

Advertisement