காலா ட்ரைலரில் நீங்க இதை கவனித்தீர்களா.? கெத்து காட்டும் விஜய்.! புகைப்படம் உள்ளே .!

0
1131
kaala

பொதுவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை பயன்படுத்தி தான் ஒரு சில நடிகர்கள் தங்கள் படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து கொள்வார்கள். குறிப்பாக அவர்கள் நடிக்கும் படத்தில் பெரிய நடிகர்களின் வசனங்களோ, புகைப்படங்களோ பயன்படுத்தி கை தட்டல்களை வாங்கிவிடுவார்கள்.ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இது தேவை இல்லை.

kaala teaser

ரஜினியின் மருமகன் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை தெறிக்கிவிட்டுள்ளார். , சில நாட்களுக்கு முன்னர் காலா படத்தின் டீசெர் ஒன்று வெளியாகி இருந்தது. வழக்கம் போல ரசிகர்கலால் அந்த டீசெர் பெரிதும் விரும்பப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது வெளியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் டீசரில் நீங்கள் நன்றாக உற்று நோக்கினால், ஒரு காட்சியில் நடிகர் விஜய் நடித்த “பைரவா” படத்தின் போஸ்டர் ஒன்று தென்படுகிறது. இதனால் இந்த படத்தில் நடிகர் விஜய்யின் ரெபரன்ஸை பயன்படுத்தி இருக்கிறார்களா என்ற எண்ணம் விஜய் ரசிகர்கள் தோன்றுகிறது

bhairava

சமீபத்தில் “காலா” இசைவெளியிட்டு விழாவில் இயக்குனர் ரஞ்சித்திடம், நீங்கள் விஜயை வைத்து படம் எடுப்பீர்களா என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்விகேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் ரஞ்சித் அந்த பத்திர்கையாளரிடம் “நீங்கள் தயரிப்பாளர் என்றால் எனக்கு ஓக்கே ” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.