திருவிழா கக்குஸ் ஆகிட்டானுங்க – பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய ராதாரவி.

0
281
radharavi
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்து நடிகரும், அரசியல்வாதியும் ஆன ராதாரவி கழுவி ஊற்றி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரம் தொடங்கி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து தாமாகவே வெளியேறி இருந்தார். இவரை தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது வாரத்திற்கான எவிக்சன் நடந்தது.

- Advertisement -

ராதாரவி அளித்த பேட்டி:

அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். வழக்கம் போல் மூன்றாவது வாரம் தொடங்கி பிக் பாஸ் டாஸ்கை கொடுத்து இருக்கிறார். கலவரமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் ராதாரவி கழுவி ஊற்றி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதாவது, சமீபத்தில் ராதா ரவி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் பிக் பாஸ் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியிருந்தது, பிக் பாஸ் எவ்வளவு நாள் தானுங்க பல்லு விலக்குவது, குளிப்பது, துணி துவைப்பது, சாப்பிடுவது, கக்கூஸ் கழுவுவது என்று பார்ப்பது.

பிக் பாஸ் குறித்து சொன்னது:

இதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா? ஒரு அறிவுபூர்வமாக, ஆக்கப்பூர்வமாக பேசுகிறார்களா? எதுவும் கிடையாது. தின்னுவது, துணி துவைப்பது, கக்கூஸ் கழுவது இதையெல்லாம் காண்பிப்பதற்காக ஒரு நிகழ்ச்சியா? இதை வீட்டிலேயே எதையாவது பண்ணி காண்பிக்கலாமே? எவனோ ஒருத்தன் செய்தான் என்று அதை இந்தியில் கொண்டு வந்து பின் தமிழில் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதை திருவிழா கக்குஸ் ஆக்கிவிட்டார்கள். கமல் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பிட மாட்டார். அப்படியே கூப்பிட்டாலும் நான் போக மாட்டேன். அவர் படத்தில் நடிக்க கூப்பிட்டால் போவேன். அவர் வீட்டிற்கு கூப்பிட்டால் போவேன் தவிர பிக் பாஸ்க்கு போக மாட்டேன்.

-விளம்பரம்-

ஜூலி குறித்து சொன்னது:

ஆரம்பத்தில் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் ரகசியமாக வெளியே வராமல் வைத்திருந்தார்கள் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது எல்லோருமே வராங்க போறாங்க. மார்க்கெட் மாறி ஆகிவிட்டது. சினிமா பிரமோஷனுக்கெல்லாம் உள்ளே போய்விட்டு வருகிறார்கள். அதேபோல் போராட்டத்தில் கத்திய அந்த பெண் ஜூலி அம்மன் வேஷம் போட்டு ஒரு படத்தில் பண்ணி இருக்கு. அம்மன் என்றால் கே ஆர் விஜயா போன்ற சில நடிகைகளை சொல்லலாம். அவர்களை பார்க்கும்போது கையெடுத்து கும்பிட தோணும். ஆனால், இந்த ஜூலி பொண்ணு அம்மன் வேடம் போட்டிருக்கு. கருமம் என்னத்த சொல்லுவது.

கமல் குறித்து சொன்னது:

அம்மன் என்ன கண்ணை குத்த போகிறதா? பிக் பாஸ் வீட்டிற்குள் கமலை நூறு நாட்கள் விட்டு விட வேண்டும். மக்களை ரீச் பண்ணுவதற்காக கமல் இந்த ப்ரோக்ராமை செய்கிறார் என்று சொல்றாங்க. ஆனால், இப்படியா மக்களை ரீச் பண்ண வேண்டும். அவர் ஒரு பிறவிக் கலைஞர். பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி தான் மக்களை சென்றடைய வேண்டும் என்று கிடையாது. மக்களை சென்றடைய எவ்வளவோ வழிகள் இருக்கிறது. நான் பிக் பாஸை குறை சொல்லவில்லை. அது ஒரு நிகழ்ச்சி. ஆனால், எனக்கு பிடிக்கவில்லை, நான் பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

Advertisement