விஜய் அழைத்தால் கண்டிப்பாக கட்சியில் சேருவேன் என்று நடிகர் ராதாரவி கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவரது தந்தை பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. இவர் தன்னுடைய திரையுலக வாழ்ககையை நாடகம் போடுவதில் இருந்து தொடங்கினார். பின்னர் இவர் தனக்கென்று ஒரு நாடக குழுவை தொடங்கி “ரகசிய ராத்திரி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலமும் சினிமாவில் அறிமுகமாகினார்.
அதன் பின்னர் இவர் தமிழில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், இவர் 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் ராதா ரவி ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘கடைசி தோட்டா’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நவீன் குமார் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் வி.ஆர் சுவாமிநாதன் ராஜேஷ் தயாரித்திருக்கிறார்.
ராதாரவி நடித்த படம்:
அதுமட்டுமில்லாமல் சுவாமிநாதன் ராஜசேகர் இசையும் அமைத்திருக்கிறார். இந்த படத்தில் ராதா ரவி உடன் வனிதா விஜயகுமார், ஸ்ரீகுமார், ஸ்ரீஜா ரவி, யாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு மோகன் குமார் ஒளிப்பதிவும், நீலு குமார் வசனமும் எழுதி இருக்கிறார். விறுவிறுப்பான சஸ்பெண்ட் திரில்லர் பாணியில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தினுடைய பணிகள் எல்லாம் முடிந்து ஆகஸ்ட் மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
விழாவில் ராதாவி:
இந்நிலையில் இந்த படம் தொடர்பான விழா சமீபத்தில் நடைபெற்றிருந்தது. இதில் படகு குழுவினர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்கள். அப்போது விழாவில் நடிகர் ராதாரவி, கடைசி தோட்டா ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம். ஒரு ரிசார்ட்டில் நடக்கும் கதையை இயக்குனர் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் காண்பித்திருக்கிறார். சிறப்பாக படம் வந்திருக்கிறது. இந்த படத்தில் நான் தான் கதாநாயகன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் நாயகன் கிடையாது, கதையின் நாயகன்.
படம் குறித்து சொன்னது:
அனைவருக்குமே நல்ல கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால், கதைக்கரு என் மீது சென்றதால் என்னை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். வனிதா விஜயகுமாருக்கும் சிறப்பான வேடம். மேலும், படத்தினுடைய விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறேன். அது யாருமே கேட்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொள்ளவில்லை. இது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். நான் சினிமா உலகில் நுழைந்து 50 ஆண்டுகளை கடந்து விட்டேன்.
விஜய் அரசியல்:
இதையும் தாண்டி நடித்துக் கொண்டுதான் இருப்பேன். நடிகன் என்பவன் இறந்தும் நடிப்பவன். அவனுடைய இறப்பு வீடியோவை வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அதேபோல அவன் இறந்தாலுமே அவன் நடித்த கதாபாத்திரங்களும் காட்சிகளும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறோம். அதனால் என்னுடைய நடிப்பு பயணமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நான் இப்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. விஜய் அரசியலுக்குள் நுழைந்து இருப்பது வரவேற்கக்கூடிய விஷயம். அவர் என்னை அழைத்தால் கண்டிப்பாக அவருடைய கட்சியில் சேருவேன் என்று கூறியிருக்கிறார்.