ரத்தக்கறை யோடு முதலில் போலீஸ் ஸ்டேஷன் போனது என் அப்பா தான், அப்போது ஆட்சி மாறியதால் – ராதாரவி சொன்ன உண்மை.

0
556
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை, நடிகர் எம் ஆர் ராதா துப்பாக்கியால் ஏன்? சுட்டார் என்று அவரது மகன் ராதாரவி தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக இருந்த எம் ஆர் ராதா ஆனால் எம் ஜி ஆரை வீட்டிற்கே நேரடியாக சென்று அவரை துப்பாக்கியால் சுட்டார். அது மட்டுமல்லாமல் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். கடந்த 1967ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

துப்பாக்கி சூட்டில் பெருத்த காயம் அடைந்த எம்ஜிஆர் கழுத்தில் பலத்த மாவு கெட்டு போட்டு இருந்தார். இந்த நிலையில் எம்ஜிஆரை புகைப்படம் எடுத்து சுவரொட்டியாக ஒட்டலாம் எம்ஜிஆரை ஆர்.எம் வீரப்பன் தெரிவித்தார். எம்ஜிஆரின் புகைப்படம் மற்றும் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டி திமுகவின் வெற்றியை உறுதி செய்தது. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது எம்.ஆர்.ராதா குணமாகி வந்தவுடன் கைது செய்யப்பட்டார்.

- Advertisement -

மாறுபட்ட கருத்துக்கள் :

இந்த நிலையில் வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல்லாக என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

ராதாரவியின் பேட்டி :

இந்த நிலையில் எம்ஜிஆரை ஏன்? எம்ஆர்ராதா துப்பாக்கியால் சுட்டார் என்று சமீபத்தில் செய்தி சேனலுக்கு கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் நடிகரும் எம்ஆர்ராதா ஆகிய ராதாரவி. அவர் கூறியதாவது எம்ஜிஆரும் என்னுடைய அப்பாவும் நல்ல நண்பர்கள். என்னுடைய அப்பா எப்போதும் முதலாளி அப்போது 12 வயது சிறுவனாக இருந்தார். ஆனாலும் புரட்சித்தலைவர் என்னுடைய அப்பாவிற்கு நெருக்கிய நண்பர்.

-விளம்பரம்-

எம்ஆர்ராதா கொடுத்த 1 லட்சம் :

அவர்களுடைய இந்த பிரிவுக்கு காரணம் என்னவென்றால் `என்னுடைய அப்பாவிற்கு வாசு என்ற தயாரிப்பாளர் ஒருவர் இருந்தார். அப்போது “பெற்றால் தான் பிள்ளையா” படம் எடுப்பதற்கு அந்த நேரத்தில் 1 லட்சம் தேவை. அப்போது என் அப்பா நான் ஒரு லட்சரூபாய் தருகிறேன் என்றும் எம்ஜிஆர் நடிப்பதற்கு தேதியும் எம்ஆர்ராதா கேட்டதும் உடனடியாக கொடுத்து விட்டார். “பெற்றால் தான் பிள்ளையா” படத்திற்கு எங்களுடைய தோட்ட பாத்திரத்தை வைத்து 1 லட்சம் வாங்கி கொடுத்தார். பின்னர் பணம் வாங்கிய தயாரிப்பாளர் “வாசு” தானே பணத்தை திருப்பி தரவேண்டும், ஆனால் அப்போது எம்ஜிஆர் நான் அந்த பணத்தை தருகிறேன் என்று கூறினார்.

அலையவிட்ட எம்ஜிஆர் :

எம்ஜிஆர் பணத்தை கொடுக்கிறேன் என்று கூறியதால் வந்த திருப்புமுனை தான் இந்த பிரச்சனை. பணத்தை திருப்பி கொடுப்பதற்கு என்னுடைய அப்பாவை சில நாட்கள் அலையவிட்டார் எம்ஜிஆர். உங்களுக்கே தெரியும் என்னுடைய அப்பா எவ்ளளவு கோவக்காரர் என்று. சொல்லப்போனால் என்னுடைய அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டது கோவத்தில் முடிவு எடுக்க கூடாது, அன்பாக இருக்கும்போது சத்தியம் செய்யக்கூடாது என்று. இதற்கு என்னுடைய அம்மா கூட 1 லட்சரூபாய்க்காக ஏன் இப்படி செய்திர்கள், இதனால் நம்முடைய குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் என்னுடைய அப்பாவினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இனி எவனு கேட்க கூடாது :

அதற்கு பிறகு என்னுடைய அப்பத்தான் முதலில் ரத்தக்கறையுடன் அவர் குற்றவாளியாக இருந்தாலும் நான் தான் எம்ஜிஆரை சுட்டேன் என்று முதலில் காவல் நிலையத்தில் பதிவு செய்தார். ஆனால் அப்போது ஆட்சி மாறியதால் இது இல்லாமலேயே போய் விட்டது. இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் இனிமேல் யாரும் ஏன்? எம்ஆர்ராதா புரட்சித்தலைவர் எம்ஜிஆரை சுட்டார் என்று கூறக்கூடாது. அதற்குத்தான் இந்த பதிவு என்று அந்த பேட்டியில் தன்னுடைய தந்தையான எம்ஆர்ராதா எம்ஜிஆரை ஏன்? சுட்டார் என்று கூறியிருந்தார் ராதாரவி.

Advertisement