நிறைய தானாம் பண்ணவன் சார், அவன் போட்டோ காமிச்சு இது யார் தெரியுதான்னு கேட்டப்ப – கேப்டனை நினைத்து கண்ணீர் விட்ட ராதாரவி.

0
450
vijayakanth
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். சாதிப்பதற்கு நிறமோ, அழகோ தேவையில்லை என்பதை சாதித்து காட்டியவர் விஜயகாந்த். மேலும், தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ரஜினி-கமல் என இருவருக்கும் மத்தியில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். அதோடு ரஜினி, கமல் ஆகியோருக்கு டப் கொடுக்கும் அளவிற்கு படங்களை கொடுத்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது.
இவர் கடைசியாக 2010ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2015 நடித்திருந்தார் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜய்காந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

- Advertisement -

விஜயகாந்த்தின் அரசியல் பற்றிய தகவல்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் 2005ஆம் ஆண்டு தமிழகத்தில் இரு பெரும் துருவங்கள் திமுக அதிமுகவிற்கு மாற்றாக தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கினார். இவர் தொடங்கி அடுத்த ஆண்டே வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். பின் எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஆனால், அதற்கு பிறகு வந்த அனைத்து தேர்தலிலும் தேமுதிக வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதனால் விஜயகாந்த் முடங்கிப் போனார். அரசியலால் இவர் படங்களிலும் கவனம் செலுத்தாமல் போய்விட்டார்.

விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்த தகவல்:

பின் அவருடைய உடல்நிலை சரியில்லாமல் போனது. இதற்காக இவர் வெளிநாடுகளில் எல்லாம் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் முன்பு போல் பேசவும் நடக்கவும் முடியாமல் போனது. அது மட்டுமில்லாமல் அவர் பெயரில் வெளியாகும் அறிக்கையில் கூட அவர் கையெழுத்து பதிலாக அவரது சீல் போட்டிருக்கும். இப்படியாக சில வருடங்களாக அமெரிக்காவில் மருத்துவம், ஓய்வு என அவருடைய வாழ்க்கையே முடங்கிவிட்டது. சில காலம் விஜயகாந்த் குறித்து எந்த தகவலும் சோசியல் மீடியாவில் வெளிவராது இருந்தது.

-விளம்பரம்-

வைரலாகும் கேப்டனின் புகைப்படம்:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கேப்டனின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கேப்டனின் தோற்றத்தை கண்டு ரசிகர்கள் பலரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர். ஒரு காலத்தில் சிங்கம் போன்று கம்பீரமாக இருந்த மனிதர் தற்போது இப்படி ஆகிவிட்டாரே! என்று கவலைப்பட்டு வருகின்றனர். அதோடு இதைப் பார்த்த ஒருவர் கூட கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மனதை விஜயகாந்த் நிலைமை உள்ளது.

விஜயகாந்த் குறித்து ராதாரவி கூறியது:

இது குறித்து பலரும் வருத்தப்பட்டு கமெண்ட்கள் எல்லாம் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான ராதாரவி இதுகுறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த புகைப்படத்தை பார்த்து நான் மனமுடைந்து அழுதுவிட்டேன். அவரைப் பார்க்க நான் முன்னாடியே முயற்சி செய்தேன். ஆனால், பார்க்க முடியவில்லை என்று விஜய்காந்தை பற்றி பேசும்போது கண்கலங்கி ராதாரவி அழுதார். இப்படி ராதாரவி பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement