ரஜினி அரசியல் வரப்போகிறேன் என்று சொன்ன நாளிலிருந்தே பலர் ஆதருவு தெரிவித்தாலும் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வருகின்றனர்.ராஜினிக்கி பிறகு அரசியலுக்கு வரப்போவதை அறிவித்த கமல் தனது கட்சிப்பணிகளை விரைந்து முடித்து வருகிறார்.ஆனால் இன்னமும் ரஜினி ஆன்மீக அரசியல் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த ரஜினி தற்போதும் எந்த ஒரு முன்னேற்றத்தையும் அவரது கட்சியில் பார்க்க முடியவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வந்த பிறகும் சினிமா துறை பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் பல நவ்ரடி தாக்குதல்களை ரஜினி மீது வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் தான் ரஜினி இமையமலைக்கு பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இவர் எதற்காக இமையமலைக்கு செல்கிறரர் என்று இன்னமும் யாருக்கும் தெரியாது .இதுபற்றி வில்லன் நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.ரஜினி கட்சி ஆரம்பித்ததிலிருந்தே நடிகர் ராதாரவி பல விமர்சனங்களை வைத்தார்.தற்போது பேட்டி ஒன்றில் பேசிய ராதா ரவி தமிழ்நாட்டில் புதிதாக கட்சிக்கொடியை உருவாக்க இப்போது கலரே கிடையாது.
அதனால் ரஜினி இமயமலை வரை சென்றதன் காரணம் அவரின் கட்சிக்கொடியின் நிறத்திற்கு அனுமதி வங்கத்தான் என்று கிண்டலடித்துள்ளார்.ஆரம்பம் முதலே ரஜினியின் அரசியல் பயணத்தை விமிர்சித்து வரும் ராதரவியின் மீது ரஜினி ரசிகர்கள் சற்று கோவத்தில் உள்ளனர்.