சன் தொலைக்காட்சியில் இருந்து வேறு தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா.!

0
1397
Radhika
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தற்போதும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.  வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது. வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த இந்த நடிகவேளின் வாரிசு, சமீபத்தில் `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம்எடுத்தார்.

இதையும் படியுங்க : பழனியால் சர்ச்சையில் சிக்கிய நிஷா.! அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார்.! காரணம் ?

- Advertisement -

தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ராதிகா பல ஆண்டுகளாக ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற பல சீரியல்களை தயாரித்துள்ளார்.

Radhika-Sarathkumar

சமீபத்தில் திடீரென ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி சீரியலில்இருந்து விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம். சரத் குமார் தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் வேறு ஒரு சீரியலை சேனல் ஒளிப்பரப்பு செய்ய, ராதிகா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். அதாவது, ராதிகா சன் டிவியிலிருந்து தற்போது ஜீ தமிழுக்கு மாறவுள்ளதாக அவர் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

Advertisement