புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாபெரும் உதவி செய்த லாரன்ஸ்..!இதுவரை எவரும் செய்யாதது..!

0
660
Lawrance
- Advertisement -

கஜா புயல், கடந்த 15-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. எட்டு மாவட்டங்களில் கடும் சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. கஜா புயல் கரையைக் கடந்து 6 நாள்களாகியும், அதிலிருந்து அந்த மக்களால் மீண்டு வர முடியவில்லை.

-விளம்பரம்-

Ragava lawrence

- Advertisement -

தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள், அரசாங்கத்தின் உதவிகள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டி தரவுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள லாரன்ஸ், கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நம் விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டித்தர முடிவு செய்துள்ளேன். இதற்கு உங்களது ஆசிர்வாதம் தேவை. கஜா புயல் பாதித்த 7 மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரையும் பார்க்கும்போது வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலைவணங்குகிறேன். ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்து வேதனையடைந்தேன். அந்தக் குடிசை வீட்டை அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும், மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ஆகும். அந்த வீடு மட்டுமல்ல. இதுமாதிரி முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளைக் கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களைத் தொடர்புகொண்டால் நானே நேரிடையாகப் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று வீடு கட்டித்தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த உள்ளேன். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள்.

நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். அன்பு பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement