26 வருசமா இந்த பிரபுதேவா பாட்ட பாக்குறீங்களே. அதில் என்னிக்காவது லாரன்ஸை நோட் பண்ணி இருக்கீங்களா.

0
98610
Lawrance
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், நடன அமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் என்ற படத்தில் நடன கலைஞராக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் படங்களில் முதலில் கவுரவ வேடங்களில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு கதாநாயகனாகவே அவதாரம் எடுத்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த முனி, பாண்டி, ராஜாதி ராஜா, காஞ்சனா, முனி 3 போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

-விளம்பரம்-

சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் அவர்கள் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்து வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் ஜென்டில்மேன் படத்தின் போது நடனம் ஆடிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஜென்டில்மேன். இந்தப் படம் தான் சங்கர் இயக்கிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ என்ற ஒரு பாடலுக்கு நடிகர் பிரபுதேவா, கௌதமி நடனம் ஆடினார்கள். நடிகர் பிரபு தேவாவுடன், ராகவா லாரன்ஸும் இணைந்து ஆடி உள்ளார். ராகவா லாரன்ஸ் இணைந்து ஆடி உள்ள அரிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது ராகவா லாரன்ஸ்ஸா?? என்று வியப்பில் உள்ளார்கள்.26 வருசமா இந்த பிரபுதேவா பாட்ட பாக்குறீங்களே. அதில் என்னிக்காவது லாரன்ஸை நோட் பண்ணி இருக்கீங்களா.

-விளம்பரம்-
Advertisement