கஷ்டப்படுகிறோம் பெரிய நடிகர்கள் உதவி செய்யுங்கள். கண்ணீர் விட்ட துணை நடிர்களுக்கு உதவி செய்த நடிகர்.

0
1997
actor
- Advertisement -

திரை உலகில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். அந்த திறமையை காண்பித்து சாதனை படைக்க பல போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். அன்றாட வாழ்க்கையில் இருந்தே அந்த போராட்டம் என்பது துவங்கும், அதை எல்லாம் மீறி தான் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

- Advertisement -

ஆகையால், பல துணை நடிகர்களின் நிலையும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. தமிழ் திரையுலகில் நடன இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ். தற்போது, நடிகர் ராகவா லாரன்ஸ் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அதில் “இப்போது தான் பிரபல நடிகர் உதயா அனுப்பிய வீடியோ பதிவை பார்த்தேன்.

‘கொரோனா’ லாக் டவுன் டைமில் ஷூட்டிங் எதுவும் இல்லாததால், பொருளாதார ரீதியில் ரொம்பவும் கஷ்டப்பட்டு வரும் தென் இந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறேன். எனக்கு பல வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது உதவி செய்ய சொல்லி.. ஒரு தனி மனிதனாக என்னால் எந்த அளவுக்கு செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு உதவிகள் செய்து வருகிறேன்.

-விளம்பரம்-

Just now I saw this video, Thanks to actor Udhay for sending me this. I donate 25 lakhs to then indhiya nadigar sangam….

Raghava Lawrence ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಏಪ್ರಿಲ್ 16, 2020

யாராவது நிதியுதவி அளிக்க விரும்பினால், என்னுடன் சேர்ந்து உதவி செய்யுங்கள். ஒரு ரூபாய் கூட உதவியாக இருக்கும்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் உதயா சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் “மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள். இக்கட்டான சூழ்நிலையில் உதவுவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது… கொடுக்கும் மனம் இருக்க வேண்டும்.. திரைத்துறையை சார்ந்தவர்களின் குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த ஒளிவிளக்கு.. கொடுத்து சிவந்த கை, எங்கள் கருப்புவைரம் திரு. ராகவா லாரன்ஸ் அவர்கள் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்” என்று நன்றி தெரிவித்து நடிகர் உதயா பதிவிட்டிருக்கிறார்.

Advertisement