கேரளா வரலாறு காணாத இயற்கை சீற்றத்தைச் சந்தித்துள்ளது. தற்போது அங்கு மழை படிப்படியாகக் குறைந்து வருகிறது. `கடந்த 100 ஆண்டுகளில் இப்படியொரு பேரழிவை கேரளா சந்தித்ததில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Advertisement

கன மழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் உதவி செய்ய முன் வந்துள்ளன.தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர்.

இதில் தமிழ் நடிகர்களில் அதிகப்படியாக நடிகர் விஜய் 70 லட்ச ரூபாயை வழங்கி இருந்தார். இந்நிலையில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தமிழ் நடிகர்களிலேயே விஜய்க்கு பிறகு கேரள மழை வெல்ல நிவாரண நிதிக்கு நடிகர் லாரன்ஸ் தான் அதிகபடியான தொகையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

சமீபத்தில் இந்தி நடிகர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள மழை வெள்ள நிவாரண நிதியாக 1 கோடி ருபாய் அளித்திருந்தார். தற்போது அவரை தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர் லாரன்ஸ் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். தமிழகத்தில் இருந்து செல்லவும் தொடர் உதவிகளால் கேரள மக்கள் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக கேரளத்தில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Advertisement