உண்மையான செங்கேணியின் தற்போதைய நிலையை வெளியில் கொண்டு வந்த வலைப்பேச்சு – பேருதவியை அறிவித்த லாரன்ஸ்.

0
616
lawrance
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

- Advertisement -

அதே போல் இந்த படம் வெளியான பின்னர் உண்மையான ராசாக்கண்ணுவின் குடும்பத்தினரை தேடி பலரும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல ‘வலை பேச்சு’ குழுவினர் ராசா கண்ணுவின் மனைவியான பார்வதியை நேரில் சந்தித்து அவரது நிலையை பற்றி கூறினர். மேலும், பார்வதிக்கு ஒரு தங்க சங்கலியை பரிசாக அளித்தனர். மேலும், அவர்கள் மிகவும் பாழடைந்த ஒரு குடிசையில் வாடகைக்கு வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு சூர்யா வீடு கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் பார்வதிக்கு புதிய வீடு கட்டித்தரப்படும் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவியில், செய்யாத குற்றத்துக்காக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் இன்றைய வாழ்க்கை நிலையை வலைபேச்சு மூலகமாக பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. வலைபேச்சு பிஸ்மி அவர்களிடம் மேலும் விவரங்களை கேட்டு அறிந்ததும் கூடுதலாக துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறேன்.

-விளம்பரம்-

ராசா கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்கு கொண்டு வந்த வலைப்பேச்சு குழுவினருக்கு என் நன்றிகள். 28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வு இன்றைக்கு தமிழகம் முழுக்க பேசுபொருள் ஆக்கிய ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் கதையை உரிய கலைப்படைப்பாக மாற்றிய திரு சூர்யா அவர்களுக்கும் திருமதி ஜோதிகா அவர்களுக்கும் இயக்குனர் திரு ஞானவேல் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் என்று பதிவிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ்

Advertisement