இந்த போஸ்டர விடுங்க, லாரன்ஸ்சின் செகண்ட் லுக்க பாத்தீங்களா – பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
2015
lawrance
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். லாரன்ஸ் என்று சொன்னாலே தற்போது காஞ்சனா பட சீரிஸ் தான் அனைவர்க்கும் நினைவிற்கு வரும்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு பேய் படத்தை அலுத்து போகும் அளவிற்கு எடுத்துவிட்டார் லாரன்ஸ். பொதுவாக லாரன்ஸ் பட ஹிட் அடிக்கிறதோ இல்லையோ அவரது படத்தின் பர்ஸ்ட் லுக் வித்யாசமாக தான் இருக்கும். இப்படி நிலையில் நடிகர் லாரன்ஸின் புதிய படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு துர்கா என்று பெயர் வைத்து உள்ளனர்.

இதையும் பாருங்க : ரோஜா சீரியல் நாயகன் சிப்புவிற்கு திடீரென திருமணம் முடிந்தது – வெளியான புகைப்படம் இதோ.

- Advertisement -

நேற்று (ஆகஸ்ட் 6) இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. துர்கா படத்தின் சாமியார் கெட்டப் போஸ்டர் ’முனி’, ’காஞ்சனா’, காஞ்சனா 2, ’காஞ்சனா 3’ போன்றே பேய் படம் போன்று தான் இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் போஸ்டரையும் லாரன்ஸ் நேற்று வெளியிட்டு இருந்தார்.

அதில் சுருளி ராஜன் போன்ற கெட்டப்பில் அடையாளம் தெரியாத அளவு படு வித்யாசமான லுக்கில் இருந்தார் லாரன்ஸ். மேலும், இந்த படத்தை தான் இயக்கவில்லை என்றும் அறிவித்து உள்ளார். லாரன்ஸ்ஸின் இந்த போஸ்டரை கண்ட பலரும், என்ன selfie எடுத்துவிட்டு second லுக்னு சொல்றீங்க என்று பங்கமாக கலாய்த்து வருகின்றனர். தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்தில் நடித்து வருகிறார் அதுபோல ருத்திரன் என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இயக்குநர் வெற்றிமாறன் கதை,திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ படத்திலும் நடித்து வருகிறார். இறுதியாக இந்தியில் காஞ்சனா படத்தை ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீ – மேக் செய்து இருந்தார். ஆனால், தற்போது தமிழில் எந்த படத்தையும் இயக்காமல் இருக்கிறார் லாரன்ஸ். இவர் அடுத்து படம் இயக்கினால் அதுவும் காஞ்சனா சீரிஸாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement